மாஸ்டர் சாதனையை முறியடிக்குமா கோட்?!.. ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?!..
Goat Trailer: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். ரஜினியை போல அதிக ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். இப்போது ரஜினியை விடவும் அவருக்கு அதிக ரசிகர்கள், ரசிகைகள் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதுற்கில்லை. ஏனெனில், இப்போது ரஜினியின் ரசிகர்களாக இருப்பவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
ஆனால், 5 வயதிலிருந்து 30 வரையிலான இளைஞர் கூட்டம் விஜயின் ரசிகர், ரசிகைகளாக இருக்கிறார்கள். அவரின் படங்கள் வெளியாகும்போது மட்டுமல்ல. அவரின் படம் தொடர்பான செய்திகளையும் அவர்கள் கொண்டாடுகிறார்கள். விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியீடு என எது வந்தாலும் அவர்களுக்கு கொண்டாட்டம்தான்.
இதையும் படிங்க: அப்பா இல்லனா என்ன… லோகி ஸ்டைலை கோட்டிலும் பண்ணிடலாம்.. வெங்கட் பிரபு ஸ்கெட்ச்…
விஜய் இப்போது கோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ளது. சில போஸ்டர்களும், 3 பாடல்களும் வெளியாகியிருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
விஜயின் மாஸ்டர் படம் வெளியான போது நெய்வேலியில் ரசிகர்களை வைத்துக்கொண்டு அவர் எடுத்த செல்பி டிவிட்டரில் அதிக முறை ரீடிவிட் செய்யப்பட்டது. டிவிட்டரே இதை சாதனையாக அறிவித்தது. அதேபோல், விஜய் படங்களின் பாடல்கள் வீடியோவும் பல மில்லியன் வியூஸ் போனது.
ஆனால், கோட் படத்தின் பாடல்கள் யுடியூப்பில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 3 பாடல்களுமே ரசிகர்களை கவரவில்லை. ஆனால், படம் வந்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என சொல்லி இருக்கிறார் வெங்கட்பிரபு. இந்நிலையில்தான் கோட் படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகவிருக்கிறது.
விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வீடியோ யுடியூப்பில் 78 மில்லியன் (7.8 கோடி) வியூஸ்களை பெற்றது. இந்த சாதனையை கோட் படத்தின் டிரெய்லர் வீடியோ முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.