கோட் படத்தில் வெங்கட் பிரபு சம்பளம்… கோடிகளில் இவரும் இணைஞ்சிட்டாரா?

Venkat Prabhu: சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தினை இயக்கிய வெங்கட் பிரபுவுக்கு கல்பாத்தி எஸ் அகோரம் கொடுத்த சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பாடகராக நுழைந்து பின்னர் மாஞ்சோலை திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறியவர்தான் வெங்கட் பிரபு. ஆனால் அவரின் நல்ல காலத்தால் அவர் நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இதையும் படிங்க: ‘தளபதி 69’க்கும் யுவன்தான் மியூஸிக்கா? ஒரு தடவ பட்டது போதாதா? வைரலாகும் செய்தி

இதைத்தொடர்ந்து தன்னுடைய ரூட்டை இயக்குனராக மாற்றினார். 2007 ஆம் ஆண்டு புதுமுக நடிகர்களை வைத்து சென்னை 28 என்ற படத்தை இயக்கினார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து சரோஜா மற்றும் கோவா திரைப்படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அஜித்குமாரின் 50வது திரைப்படத்தை மங்காத்தா என்னும் பெயரில் இயக்கி ரசிகர்களிடம் தன்னுடைய டைரக்ஷனுக்கு அப்ளாஸை அள்ளினார்.

இதைத்தொடர்ந்து சூர்யாவை வைத்து மாஸ், சிம்புவை வைத்து மாநாடு, சென்னை 28 இரண்டாம் பாகம், லைவ் டெலிகாஸ்ட், குட்டி ஸ்டோரி என்ற வெப் சீரிஸ்கள் என வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான எல்லாமே வித்தியாசமான படைப்பாக அமைந்தது.

இதையும் படிங்க: இப்படியே போனா பிரசாந்த் நிலமைதான் ஜெயம் ரவிக்கும்!.. என்னப்பா சொல்றீங்க!…

இந்த நேரத்தில் தான் அவருக்கு விஜயின் கடைசி திரைப்படங்களில் முக்கியமாக அமைந்த கோட்டை இயக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Venkat prabhu

இந்நிலையில் கோட் திரைப்படத்திற்கு வெங்கட் பிரபு சம்பளமாக 10 கோடி வரை வாங்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுவரை லோகேஷ், நெல்சன் மற்றும் அட்லீ மட்டுமே இந்த லிஸ்டில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it