அப்பா இல்லனா என்ன… லோகி ஸ்டைலை கோட்டிலும் பண்ணிடலாம்.. வெங்கட் பிரபு ஸ்கெட்ச்…

by Akhilan |   ( Updated:2024-08-17 10:28:31  )
அப்பா இல்லனா என்ன… லோகி ஸ்டைலை கோட்டிலும் பண்ணிடலாம்.. வெங்கட் பிரபு ஸ்கெட்ச்…
X

Venkat Prabhu: விஜயின் சினிமா கேரியரின் முடிவில் இருக்கும் நிலையில் கோட் படத்தில் சில முக்கியமான அம்சங்களும் இடம்பெற இருப்பதாக சுவாரஸ்ய தகவல்கள் கசிந்துள்ளது.

கல்பாத்தி எஸ்.அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து இருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தினை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் விஜய், பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க:கவர்ச்சி காட்டி நடிச்சி அந்த படத்தோட வாய்ப்பு போச்சி!.. புலம்பும் பிரபல நடிகை….

படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. பலநாள் எதிர்பார்ப்புக்கு பின்னர் டிரைலரை இன்று படக்குழு வெளியிட இருக்கும் நிலையில் என்னென்ன ஸ்பெஷல் அம்சங்கள் இருக்கும் என ஏகப்பட்ட யுகங்கள் நிலவி வருகிறது. இந்நிலையில், வெங்கட் பிரபு இளையராஜாவிடம் ஒரு பாடலை வேண்டும் எனக் கேட்டு இருந்தாராம்.

இப்பாடலுக்கு கங்கை அமரன் பாடல் எழுதி வேண்டும் எனவும் ஆசைப்பட்டாராம். ஆனால் இளையராஜா பிஸியாக இருப்பதால் அவர் இதுவரை எதுவும் சொல்லாமலே இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் தொடக்கத்தில் சின்ன இசையாவது வேண்டும் என்ற ஆசையில் படக்குழு இருக்கிறதாம்.

இதையும் படிங்க:எலே! எத்தனை கேமியோ இருக்குப்பா.. கோட் படத்தில் முன்னணி நடிகரா? ஆத்தாடி!

அவர் ஓகே சொல்லாத பட்சத்தில் இளையராஜாவின் ஹிட் பாடலை முக்கிய இடத்தில் இடம்பெற வேண்டும் என்ற முடிவில் வெங்கட் பிரபு இருக்கிறாராம். ரெட்ரோ பாடல் மோகம் சமீபகாலமாக கோலிவுட்டில் வைரல் ஹிட் அடித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த இந்த டிரெண்ட்டில் வெங்கட் பிரபுவும் இணைந்து இருக்கிறாராம்.

முக்கிய இடத்தில் வைக்கப்பட இருக்கும் அந்த பாடல் வெளிநாட்டு வாழ்க்கை சம்மந்தப்பட்ட பாடலாக கூட இருக்கலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டு இருக்கும் நிலையில் கோட் படத்தின் சஸ்பென்ஸ்களை காண ரசிகர்கள் செம எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

Next Story