கோட் விஜய் படமா? தக் லெஃப் பதில் கொடுத்த பிரசாந்த்.. நீ படிச்ச ஸ்கூல நான் வாத்தியாருடா!

Published on: January 5, 2024
---Advertisement---

Prasanth: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த பிரசாந்துக்கே இப்படி ஒரு நிலைமையா என பலரும் கவலையில் இருந்தனர். ஆனால் நான் எப்பையுமே புலி தான் என்ற லெவலில் அவர் கொடுத்து இருக்கும் ஒரு பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய், அஜித் தான் தற்போதைய கோலிவுட் என மார்தட்டி கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் வளர்ந்த காலத்தில் டாப் ஸ்டாராக இருந்தவர் பிரசாந்த். வைகாசி பொறாந்தாச்சு தான் அவரின் முதல் படம். அதுவே நல்ல ரீச்சை அவருக்கு கொடுத்தது. வரிசையாக வாய்ப்புகள் குவிந்தது.

இதையும் படிங்க… என் கண்ணு உங்க மேல தாங்க போகுது… ரஜினி சொன்னது ராக்கிங் மாதிரி இருந்தது.. பெப்சி உமா சொன்ன ஷாக் தகவல்..!

கல்லூரி வாசல் என்ற படத்தில் இவர் தான் ஹீரோ. அஜித் கூட சைட் ரோலில் தான் நடித்தார். மணிரத்னத்துடன் திருடா திருடா, ஷங்கருடன் ஜீன்ஸ் என இவர் நடித்த படங்கள் எல்லாமே செம ஹிட்டானது. ஆனால் அவரின் திருமண வாழ்க்கை அவரின் மொத்த கேரியரையுமே நாசம் செய்தது. கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்தார் பிரசாந்த்.

ஆனால் அவர் வேறு ஒருவரை படிக்கும் போது திருமணம் செய்து இருந்தார். அந்த தகவல் இவருக்கு தெரிய மனைவியை விவகாரத்து செய்து விட்டார். அதில் கவனம் செலுத்தி வந்தவரின் திரை வாழ்க்கையிலும் பெரிய இடி விழுந்தது. அவரின் அந்தகன் படம் கூட நிறைய நாட்களாக கிடப்பில் இருக்கிறது.

இதையும் படிங்க… தமிழ்சினிமாவை டிஜிட்டல் உலகிற்குக் கொண்டு வந்த படம் இதுதான்… இயக்குனரை அறிமுகப்படுத்திய கேப்டன்!

அதுகுறித்து அவரிடம் கேள்வி ஒன்றை செய்தியாளர்கள் முன் வைத்தனர். அப்போது, விஜய் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கீங்களே எப்படி பீல் செய்றீங்க எனக் கேள்வி கேட்டனர். அதற்கு அசராத பிரசாந்த், இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறோம் என தக் லைப் பதிலை கொடுத்தார். பதிலிலே இத்தனை தெளிவு இருக்கவரு கோட் படத்தில் என்ன கதாபாத்திரத்துக்கு ஓகே சொல்லி இருக்கார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.