அவர் நடிகை எனக்கு ஒரு 5 நிமிஷம் போதும்… மாஸ் நடிகையை வளைத்து போட ப்ளான் போட்ட தளபதி…

Thalapathy: நடிகர் விஜய் தன்னுடைய கோட் படத்துக்காக ஒரு நடிகையை கேட்க அது கடைசியில் பல்ப் வாங்கிய சம்பவம் குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனா அந்த நடிகைக்கு செம லாட்டரி விஷயமும் நடந்து இருக்கிறதாம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். இப்படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் அப்பா மற்றும் மகன் என விஜய் இருவேடங்களில் நடிக்கிறார்.

இதையும் படிங்க: 14 வருடத்துக்கு பின்னர் கோலிவுட்டில் நடிக்க வரும் மல்லுவுட் பிரபலம்.. எஸ்கேவால் செம விஷயம் நடந்து இருக்கே?

இதில் ஒரு வேடம் வில்லன் கதாபாத்திரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வில் ஸ்மித்தின் ஜெமினிமேன் திரைப்படத்தினை ரீமேக் செய்ய இருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. மைக் மோகன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸானது. பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் அது போதுமானதாக இல்லை என்றே வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதனால் வெங்கட் அடுத்தடுத்த பாடல்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரின் படங்களிலுமே பாடல்கள் அதிக லைக்ஸ் வாங்கும். இதில் முதல் பாடலான விசில் போடு பெரிய ஹிட் கொடுக்காமல் போயிருக்கிறது. இதனால், அடுத்த சிங்கிள் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கோட் திரைப்படத்தில் ஐட்டம் பாடல் ஒன்று இடம் பெற இருக்கிறது.

இதையும் படிங்க: ஆள பாத்து எடை போடாதீங்க! செல்வராகவன் வரியில் இத்தனை சூப்பர் ஹிட் பாடல்களா?

 

Related Articles

Next Story