கோட் படத்துல விஜயகாந்த் வர்ற சீன் அப்படி இருக்குமாமே..! அவரே சொல்லிட்டாரே..!

by sankaran v |   ( Updated:2024-08-30 07:12:41  )
Goat
X

Goat

செப்டம்பர் 5ம் தேதி தளபதி விஜயின் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படம் வெளியாகிறது. இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் இந்தப் படத்தை எப்போ பார்ப்பது என்பதிலேயே இருக்கிறது.

அந்த வகையில் பிரபல படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டி.சிவா கோட் படத்தைப் பற்றியும் அதில் நடித்த அனுபவங்கள் குறித்தும் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்ப்போமா...

Goat

Goat

விஜய் சார ஆடியன்ஸ் ப்ரேம்ல எதிர்பார்க்குறாங்க. அவங்க வரும்போது ஒரு வேல்யு இருக்கு. நீங்க 10 நிமிஷத்துல சொல்ல வேண்டிய விஷயத்தை விஜய் சாரை வச்சி 15 நிமிஷத்துல சொல்லலாம். அதனால விஜய் சாரு நடிச்ச பல படங்கள் 3 மணி நேரம் வந்துருக்கு. அதனால இது ஒரு பெரிய விஷயமல்ல.

லியோ படத்துக்கும் இதே மாதிரி அதிகமான நேரம் டூரேஷன் இருந்த போது இன்னும் கொஞ்சம் கம்மி பண்ணிருக்கலாம்னு சொன்னாங்க. ஆனா வசூலில் அது தான் ரெக்கார்ட் பண்ணுச்சு. அதிகமான வசூலை ஈட்டியது அதுதான். அதைத் தாண்டறதுக்கு இன்னொரு படம் வரணும்.

வெங்கட்பிரபு வந்து எல்லாத்தையும் வித்தியாசமா யோசிக்கிற ஆளு. பிரசாந்த்துக்கு இன்னைக்கும் அந்தகன் நல்லா போகுதுன்னா அவரை எல்லாருக்கும் பிடிக்குது. அதனால வெங்கட்பிரபு அவரை வைத்து நல்லா படத்துல பயன்படுத்திருப்பாரு. விஜயகாந்த் வர்ற காட்சிகள் படத்துல வெங்கட்பிரபு ரொம்ப சஸ்பென்ஸா வச்சிருக்காரு.

Also read: நெப்போட்டிசத்தின் மறு உருவம்தான் ‘கோட்’! ரசிகரின் கமெண்டுக்கு vp கொடுத்த பதிலடி

எங்கிட்ட கூட சொல்லலை. அவர் வர்ற காட்சிகள் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும். அதுவும் விஜய் சாருடன் காம்பினேஷன் என்பது கூடுதல் எதிர்பார்ப்பு. அது விஜய் அவருக்காக செய்யும் நன்றிக்கடனாகத் தான் நான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் தான் விஜய் உடன் அவர் பிரபலமாக வேண்டும் என்பதற்காக எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story