Connect with us
vijay

Cinema News

‘லியோ’வில் செஞ்ச தப்பு! ‘கோட்’ படத்தில் நடக்கவே நடக்காது.. கண்கொத்தி பாம்பாக சுத்தும் ஏஜிஎஸ்

GOAT Movie: விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கோட் படத்தின் படப்பிடிப்பு. தற்போது கேரளாவில் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜயை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் சூழ்ந்த வண்ணம் இருக்கின்றனர். ஏற்கனவே விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து விஜய் கேரளாவில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்னர் காவலன் திரைப்படத்திற்காக வந்திருந்தார் விஜய். விஜய் மட்டுமல்லாமல் ரஜினி , சூர்யாவுக்குமே கேரளாவில் ரசிகர் பட்டாளம் ஏராளம். அஞ்சான் திரைப்படத்திற்காக கொச்சி மற்றும் திருவனந்தபுரம் செல்லும் வழியில் சூர்யாவை அழைத்துச் செல்வது மிகவும் சவாலாக இருந்ததாம். அந்தளவுக்கு சூர்யாவுக்கும் ரசிகர்கள் ஏராளம்.

இதையும் படிங்க: புளியங்கொம்பா புடிக்கும் ஸ்ருதிஹாசன்!.. திடீர்னு கமல் பொண்ணுக்கு அடிக்கும் அடுத்தடுத்த ஜாக்பாட்!..

இந்த நிலையில் கோட் படத்தை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளரான தனஞ்செயன் ஒரு பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்தார். அதாவது ஏப்ரலில் கோட் படத்தின் படப்பிடிப்பு முடிய எப்படியும் ஜூனில் விஜயின் பிறந்த நாளன்று கோட் படத்தை ரிலீஸ் செய்து விடுவார்களா என்று தனஞ்செயனிடம் நிருபர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த தனஞ்செயன் ஜூனில் கோட் படத்தின் ரிலீஸ் என்பது சாத்தியமில்லை. ஏனெனில் ஏப்ரலில் முடிந்தால் அதிலிருந்து மூன்று மாதம் போஸ்ட் ப்ரடக்‌ஷன் வேலைகள் எல்லாம் நடக்க வேண்டும். லியோ படத்தில் செய்த தவறை இந்தப் படத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் நிச்சயமாக செய்யாது. ஆரம்பத்திலேயே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு அவசர அவசரமாக படத்தை முடிக்க ஏஜிஎஸ் விரும்பாது.

இதையும் படிங்க: நடிகையை சோதித்து பார்க்க சந்திரபாபு செய்த வேண்டாத வேலை.. நடந்த ட்விஸ்ட்தான் வேற

அதனால் எப்படியும் படம் அக்டோபர் மாதத்திற்குள் வந்துவிடும் என தனஞ்செயன் கூறினார். ஆனால் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியை முன்னரே அறிவித்ததற்கு காரணம் அஜித்திற்கு ஏற்கனவே ஒரு வருடம் இடைவெளி ஆகிவிட்டது. அதனால் அவருடைய படம் ஒரு ப்ரஸரில்தான் இருக்கிறது. அதனால் தான் அந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை முன்னரே அறிவித்துவிட்டார்கள் என தனஞ்செயன் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top