வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் தந்தை, மகன் என்ற முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து வரும் படம் கோட். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன் என பலர் நடித்துள்ளனர்.
இதனால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் செப்.5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் புரொமோஷன் வேலைகளும் ஸ்டார்ட் ஆக உள்ளது. விஜய், த்ரிஷா ஆடும் டான்ஸ் பாடலாக 4வது சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளதாம்.
கோட் படத்தைப் பற்றி திரையரங்கு ஓனர் திருச்சி ஸ்ரீதர் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.
அரண்மனை 4, மகாராஜா, கருடன், ராயன் ஆகிய படங்கள் நல்லா போனது. தங்கலான் படம் முதல் வாரம் நல்லா போனது. டிமான்டி காலனி 2 படம் 2வது வாரமும் பிக்கப். வாழை படம் இப்போது நல்ல ரீச்சாகி உள்ளது. கொட்டுக்காளி படம் அந்த அளவுக்குப் போகவில்லை. அதை ஸ்க்ரீன்ல கொண்டு வந்துருக்கக்கூடாது. ஓடிடியில் ரிலீஸ் பண்ணியிருக்கலாம். ஆடியன்ஸ் மத்தியில் அந்தளவுக்கு ரசனை இல்லையோன்னு தோணுது.
கோட் படத்துக்கு நல்ல கதை. அது எனக்கு பிடிச்சிருந்தது. காமெடி கலந்த கமர்ஷியல் மூவி. பெரிய படத்துக்குப் புரொமோஷன் தேவையில்லை என்று தெரிவித்தார். அப்போது நிருபர் குறுக்கிட்டு கோட் படத்துக்கு 1100 ஸ்க்ரீன்னு சொன்னாங்களேன்னு கேட்டார்.
Also read: கோட் படம் சந்தித்த சவால்கள்… வெற்றியை கொடுக்குமா?.. பீஸ்ட் மாதிரி ஆயிடக்கூடாதுப்பா!..
அதற்கு ஸ்ரீதர், 1100 ஸ்க்ரீன்என்பது எல்லாம் எனக்குத் தெரியாது. என்னோட கணக்கு தமிழ்நாட்டுல 700க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்ல போட வாய்ப்பு இருக்கு. தமிழ்நாட்டுல 1146 ஸ்க்ரீன்கள் தான் இருக்கு. ஆனா 1100 ஸ்க்ரீன்கள்ல கோட் படத்தைப் போட முடியாது. வாய்ப்பே இல்லை.
ரெண்டு தியேட்டர் இருந்தால் அந்த ரெண்டுலயும் போட மாட்டாங்க. அதனால 1100 சாத்தியம் இல்லை. அது வேட்டையனுக்கும் சரி. இனி வரக்கூடிய எந்தப் படங்களுக்குமே அது சாத்தியமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…
கங்குவா படம்…
நடிகர் சல்மான்…