Connect with us
goat

Cinema News

சண்டக்காரன் காலில் விழுவதே மேல்! ‘கோட்’ படத்தில் மறைமுகமாக வேலை பார்க்கும் ரெட் ஜெயண்ட்

Goat Movie: விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சிசவுத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன்  இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன் போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடிக்கிறார்கள் .

படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் விஜயின் அரசியல் முன்னெடுப்பும் இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு இன்னொரு காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தைப் பற்றிய ஏதாவது ஒரு அப்டேட் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கனவே கோட் படத்தை பொருத்தவரைக்கும் இதனுடைய டிஜிட்டல் ரைட்ஸை  netflixs தான் வாங்க போவதாகவும் ஆனால் அது இன்னும் கையெழுத்தாகவில்லை என்றும் படத்தை பார்த்த பிறகே வாங்கிக் கொள்கிறோம் என்றும் netflixs அறிவித்திருப்பதாக ஒரு செய்தி வெளியானது.

இதையும் படிங்க: இந்தியன் சினிமாவிலேயே சாதனை படைத்த ‘கல்கி’! விமர்சனத்தையும் தாண்டி என்னெல்லாம் இருக்கு பாருங்க

இப்போது இந்த கோட் படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனர் ராகுல் என்பவர் தான் வாங்கி இருக்கிறாராம். பெரிய பெரிய நடிகர்களின் படங்களை பொருத்தவரைக்கும் பெரும்பாலான படங்களை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் வாங்கி வெளியிடும். ஆனால் ஏற்கனவே அரசியல் ரீதியாக விஜய்க்கும் ஆளும் கட்சிக்கும் இடையே சிறு புகை புகைந்து கொண்டிருக்கின்றது.

அதனால் அதையும் மீறி ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கினால் கூட ஏகப்பட்ட விமர்சனத்திற்கு ஆளாகும் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் விஜய்யும் இதை விரும்ப மாட்டார் என்று தெரிகிறது. அதனால் தான் ராகுல் என்பவர் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை கோட் படத்திற்காக வாங்கி இருக்கிறாராம் .

இதையும் படிங்க: கமலுக்கு கல்கி படத்துக்காக 150 கோடி கொடுத்தது முட்டாள்தனம்… பிரபலம் கதறல்!

இன்னொரு பக்கம் வந்த செய்தி என்னவென்றால் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் செல்லப் பிள்ளையே இந்த ராகுல் தான் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் ஒரு வேளை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கூட ராகுல் பெயரில் கோட் படத்தை வாங்கி ரிலீஸ் செய்யலாம் என்று தெரிகிறது. சண்டை ஒரு பக்கம் இருந்தாலும் வியாபார நோக்கில் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய நிறுவனம்தான் ரெட் ஜெயன்ட் நிறுவனம். அதனால் இப்படி கூட நடக்கலாம் என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top