கோட் பட சூட்டிங்கில் விஜய்!.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!.. தளபதி லுக் எப்படி இருக்குன்னு பாருங்க!..
தமிழக வெற்றி கழகம் என தனது கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய் விரைவில் அரசியலில் தீவிரமாக ஈடுபட உள்ள நிலையில், கமிட்டான படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் மார்ச் மாதத்திற்குள் சூட்டிங் நிறைவடைய உள்ள நிலையில் சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அட்லீ கனவு அவ்ளோ தானா?.. விஜய், ஷாருக்கான் படத்துக்கு மூடு விழா போட்ட விஜய்.. எல்சியூவுக்கும் ஆப்பு?
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இந்த மாதம் மீசை இல்லாத தோற்றத்தில் நடிகர் விஜய் அம்பத்தூர் பகுதியில் நடந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரசிகர்களை சந்தித்த காட்சிகள் வெளியாகின. ஏராளமான ரசிகர்கள் நடிகர் விஜய் பார்க்க அந்த இடத்தில் திரண்ட நிலையில் அவர்களுக்காக கேரவன் இதெல்லாம் ஏறி கை அசைத்து, செல்பி எடுத்து தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்.
இந்நிலையில், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோருடன் நடிகர் விஜய் கையில் துப்பாக்கி ஏந்திக்கொண்டு இருந்த கோட் போஸ்டர் வெளியான நிலையில், அதே லுக்கில் நடத்தப்பட்ட சூட்டிங்கில் இருந்து நடிகர் விஜய் காரில் ஏறி கிளம்பும் போது ரசிகர்களை பார்த்து கையசைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: புதுசா புதுசா காட்டுறியே பூஜா ஹெக்டே!.. ஜூம் பண்ணி பண்ணி ரசிக்கும் நெட்டிசன்ஸ்!..
கோட் படம் தான் கடைசி படமா? அல்லது டிவிவி தயாரிப்பில் ஒரு படத்தில் விஜய் கடைசியாக நடித்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிடுவாரா என ஏகப்பட்ட கேள்விகளும் எழுந்துள்ளன.
G.O.A.T 🔥
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 2, 2024