இந்த படத்துல வேறலெவல் விஜயை பார்ப்பீங்க!.. ஹைப் ஏத்தும் வெங்கட்பிரபு!...
விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் கோட். வருகிற 5ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இப்படம் வெளியாகிறது. எல்லா மாநிலங்களிலும் ஏற்கனவே ஆன்லைன் புக்கிங் துவங்கிவிட்டது.
ஒரு ஹாலிவுட் படம் போல இப்படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தீவிரவாத குழுக்களை களையெடுக்கும் சார்ஸ் அமைப்பில் இருக்கும் விஜய் செய்யும் ஒரு விஷயம் பின்னாளில் அவருக்கு எப்படி பிரச்சனையாக மாறுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
இதையும் படிங்க: நீங்க கேட்ட ‘விசில் போடு’ பாட்டு படத்துல வராது!.. இன்னும் என்னென்ன வச்சிருக்காரோ VP..
பல வருடங்களுக்கு பின் மைக் மோகன் இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பதும், விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோரும் நடித்திருப்பதும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் படம் வெளியான அந்த பாடல்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும் என கணிக்கப்படுகிறது.
விஜய்க்கு இது 68வது திரைப்படமாகும். விஜய் என்றாலே குத்துப் பாட்டு இருக்கும். விஜயும் நன்றாக நடனமாடுவார் என்கிற இமேஜ்தான் இருக்கிறது. 4 பாடல்கள், 4 சண்டை காட்சிகள் என்பதுதான் விஜய் படத்தின் ஃபார்முலா. விஜயின் ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனாலும், நண்பன், லியோ போன்ற படங்களில் விஜய் நன்றாகவே நடித்திருந்தார். விஜய்க்குள் இருக்கும் ஒரு நல்ல நடிகனை லியோ படத்தில் பார்க்க முடியும். அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ்தான். இந்நிலையில்தான், கோட் பட இயக்குனர் வெங்கட்பிரபு விஜயின் நடிப்பு திறமை பற்றி பேசியிருக்கிறார்.
விஜய் என்றாலே டேன்ஸ், ஃபைட் என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். நல்ல மனிதர் என்பதை தாண்டி அவர் ஒரு நல்ல நடிகர். அவருக்குள் ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார். பல காட்சிகளில் அசத்தலாக நடித்து என்னை அசர வைத்தார். பொதுவாக இயக்குனர்கள் தங்கள் படங்களின் ஹீரோவை புகழந்து பேசுவது போல இதை நினைக்காதீர்கள். படம் பார்த்தால் உங்களுக்கே அது புரியும். கோட் படத்தின் விஜயின் நடிப்பு திறமையை நீங்கள் பார்ப்பீர்கள்’ என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: நல்ல கதையை ஓவர் ஆசையில் கெடுத்தது அந்த ஹீரோதான்… வெங்கட் பிரபு கொடுத்த ஷாக்…