குட் பேட் அக்லி ஹிட்டுலதான் எல்லாம் இருக்கு!.. பதட்டத்தில் ஆதிக் ரவிச்சந்திரன்

Good bad ugly: விடாமுயற்சிக்கு பின் அஜித்தின் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் இது. ஏனெனில், அஜித்தை ஒரு பக்கா மாஸ் ஹீரோவாக பார்க்கவே அவரின் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். துவக்கத்தில் அஜித் அப்படி இல்லை.
ஆனால், பில்லா படத்தில் நடித்தபோது அவரை பில்டப் செய்து காட்சிகள் வைக்கப்பட அது அஜித் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அதன்பின் தான் நடிக்கும் படங்களில் பன்ச் வசனம் பேசுவது, மாஸான காட்சிகளை வைத்து பில்டப் செய்வது என அஜித்தே பண்ண துவங்கிவிட்டார். அப்படி வெளியான மங்காத்தா படத்திலும் அது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
ஆனால், கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை ஏமாற்றியது. ஏனெனில், அவர்களுக்கு பிடித்தமான காட்சிகள் படத்தில் இடம் பெறுவதில்லை. ஆனால், குட் பேட் அக்லி பக்கா மாஸ் படமாக உருவாகியிருப்பதால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நாளை காலை 9 மணிக்கு இந்த படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தை இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா படம் மூலம் சினிமாவில் இயக்குனராக மாறினார். அதன்பின் அவர் இயக்கிய சில படங்கள் ஓடவில்லை. சிம்புவை வைத்து எடுத்த ஒரு படமும் அவர் நினைத்தபடி எடுக்கமுடியாமல் போனது. அஜித் ரசிகராக இருக்கும் ஆதிக் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபோது அஜித்துடன் நெருங்கி பழகியிருக்கிறார்.
‘ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு வா.. நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’ என அஜித் சொல்ல ஆதிக் இயக்கிய படம்தான் மார்க் ஆண்டனி. அவர் ஆசைப்பட்ட படியே அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்க ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிக்க சம்மதம் சொன்னார். அப்படி உருவான படம்தான் குட் பேட் அக்லி.
வழக்கமாக ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அஜித் அவரின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பார். அப்படித்தான் சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் ஆகியோரின் இயக்கத்தில் நடித்தார். அதுபோலவே இந்த படம் ஹிட் அடித்தால் உன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறேன் என ஆதிக்கிடம் சொல்லி இருக்கிறார் அஜித். எனவே, ஒரு கதையை அஜித்திடம் சொல்லியும் வைத்திருக்கிறார் ஆதிக். அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க தனுஷ் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்து தனுஷா, ஆதிக்கா என்பது குட் பேட் அக்லி ரிசல்ட்டில் இருக்கிறது. எனவே, பதட்டத்தில் இருக்கிறாராம் ஆதிக்.