குட் பேட் அக்லி பட்ஜெட் என்ன?!. எவ்வளவு வசூல் பண்ணா எல்லாருக்கும் லாபம்?. வாங்க பார்ப்போம்!…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று வெளியாகி தியேட்டர்களை அஜித் ரசிகர்களின் கொண்டாட்ட களமாக மாற்றி இருக்கிறது. ஏனெனில், படம் முழுக்க மாஸ், ஆக்ஷன், கூஸ்பம்ஸ் என 2.15 நேரம் முழு விருந்தையே பரிமாறியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
எனவே, அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாட துவங்கிவிட்டனர். நேற்று காலை 9 மணிக்கு இப்படம் இந்தியா முழுவதும் வெளியானது. படம் வெளியானவுடன் கொஞ்சம் நெகட்டிவான விமர்சனங்கள் வர துவங்கியது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டுமே படம் பிடிக்கும். படத்தில் கதையென ஒன்றுமில்லை. எமோஷனல் கனெக்ட்டே இல்லை என பலரும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள்.
எனவே, படம் ஹிட் அடிக்குமா என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால்,மதியத்திற்கு பின் மொத்த விமர்சனமும் மாறியது. லாஜிக் பார்க்காமல் பார்த்தால் எல்லோருக்கும் இப்படம் பிடிக்கும். ஃபேமிலி ஆடியன்ஸும் என்ஜாய் செய்வார்கள் என பலரும் சொல்ல துவங்கினார்கள். எதையும் பார்க்க தேவையில்லை. உங்களுக்கு அஜித்தை பிடிக்குமென்றால் படம் பிடிக்கும் என்றே பலரும் பதிவிட்டனர். நெகட்டிவ் விமர்சனங்கள் குறைந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வர துவங்கியது. ஒருகட்டத்தில் படம் ஹிட் என்பது உறுதியாகிவிட்டது.

நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 28.5 கோடியும், உலக அளவில் 46 லிருந்து 50 கோடி வரை இப்படம் வசூல் செய்திருப்பதாக சொல்கிறார்கள். குட் பேட் அக்லி திரைப்படம் புரமோஷன் செலவையும் சேர்த்து 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. தமிழக ரிலீஸ் உரிமை 75 கோடி, மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு உரிமை 39 கோடி என ரிலீஸுக்கு முன்பே இப்படம் 114 கோடி வியாபாரமானது. உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் சுமார் 8 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.
இந்த படம் 220 கோடி வசூல் செய்து படத்தை ரிலீஸ் செய்த வினியோகஸ்தர்களுக்கு 114 கோடி பங்கை கொடுத்தால் மட்டுமே ஹிட் படமாக அமையும் என்கிறது பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம். படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும்போது கண்டிப்பாக இப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்றே கருதப்படுகிறது.