Good Bad Ugly: குட் பேட் அக்லியில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம்… அஜித்துக்கு இம்புட்டு கம்மியாவா? ஆனா இது மோசம்!

good bad ugly
Good Bad Ugly: நடிகர் அஜித்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்த பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த விவரங்கள் கசிந்திருக்கிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், த்ரிஷா, பிரியா வாரியர், கார்த்திகேயா, சிம்ரன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.
விடாமுயற்சி திரைப்படம் அஜித் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. இதற்காக அஜித் ரசிகர்களுக்கு என்று எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. கதை, திரைக்கதை எல்லாமே பின் தள்ளி அஜித் ரசிகர்களை கவருவதற்காகவே ஒரு படம்.
அஜித் நடித்த எல்லா திரைப்படங்களின் ரெஃபரன்ஸ் செய்யும் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இது பார்க்க மாஸ் காட்சிகளாக தெரிந்தாலும் தொடர்ந்து இதையே பார்த்துக் கொண்டிருக்கும் போது ரசிகர்களுக்கு சலிப்பை தட்டி விடுகிறது.
இருந்தும் சமீபத்திய நாட்களாக தமிழ் சினிமாவில் பெரிய அளவில் மாஸ் காட்சிகளை கொண்ட திரைப்படங்கள் அமையாமல் போனது இப்படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இதனால் படத்திற்கு தற்போது வரவேற்கும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க அஜித்குமாருக்கு 100 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவருடைய போட்டியின் விஜய் 275 கோடி தாண்டிவிட்ட நிலையில் அஜித் இன்னமும் இதற்குள் இருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 10 கோடி வரை சம்பளமும், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு 5 கோடி வரை சம்பளமும் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் வில்லன் அர்ஜுன் தாஸுக்கு 80 லட்சம் சம்பளம் தரப்பட்டதாம்.
அஜித்தின் ஜோடியாக நடித்த திரிஷாவிற்கு 8 கோடியும், அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடித்த பிரியா வாரியருக்கு 15 லட்சமும் சம்பளமாக தரப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் இணையதளங்களில் இந்த தகவல்கள் பரவி வருகிறது.