latest news
குட் பேட் அக்லி ரிலீசுக்கு தேதி குறித்த இயக்குனர்!.. ஜெட் வேகத்தில் படக்குழு!…
Good bad ugly: அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் ஆக பல படங்கள் பந்தயத்தில் வரிசைக் கட்டிக் கொண்டு நிற்கின்றன. அதில் கேம சேஞ்சர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தப் படம் பொங்கல் அன்று ரிலீஸ் என தெரிந்ததும் ஒரு சில படங்கள் பொங்கல் ரிலீஸ் தேதியில் இருந்து பின்வாங்கியது.
கேம் சேஞ்சர் திரைப்படம் மிகப் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது. உலக அளவில் அந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாட்னாவில் நடந்த போது இரண்டு லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் ராம் சரணை பார்ப்பதற்காக கூடியிருந்தனர். இந்த அளவுக்கு ராம்சரண் மீது ரசிகர்கள் அதிகளவு அன்பை வைத்திருக்கின்றனர் .
இதையும் படிங்க: மருமகள் முதல் மூன்று முடிச்சு சன் டிவி தொடர்களின் புரோமோ அப்டேட்…
இந்த நிலையில் அதே பொங்கல் ரிலீஸ் ஆக வணங்கான் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் இந்த படத்தின் மீது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது .இந்த இரண்டு படங்களும் தன்னுடைய ரிலீஸ் தேதியை அறிவிப்பதற்கு முன்பே அந்த இடத்தை துண்டு போட்டு முன்னாடியே ஒப்பந்தம் செய்தது குட் பேட் அக்லி.
படத்தின் பூஜை சமயத்திலேயே ஆதிக் ரவிச்சந்திரன் பொங்கல் ரிலீஸ் என முதலிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால் இடையிடையே ரிலீஸ் தேதியில் சில பல மாற்றங்கள் இருக்கும். மே ஒன்றாம் தேதி குட் பேட் அக்லி ரிலீஸ் ஆகும் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் கண்டிப்பாக இந்த படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது .
தற்போது ரவிச்சந்திரன் பல்கேரியாவில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் .அஜித் மும்முரமாக கலந்து கொண்டு வருகிறார் .இப்படி இருக்கும் பொழுது அதனுடைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை யார் கவனிப்பார் ?பொங்கல் ரிலீஸ் என்றால் இன்னும் ரிலீசுக்கு குறைவான நாட்களே உள்ளன. எப்படி அதற்குள் போஸ்ட் ப்ரொடக்ஷன் எல்லாம் முடிந்து படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற ஒரு கேள்வியும் எழலாம்.
இதையும் படிங்க: திட்டம்போட்டு காலி பண்ணிட்டாங்க!.. கங்குவா படத்துக்கு நேர்ந்த கதி?!.. தியேட்டர் ஓனர் சொன்ன தகவல்!..
ஆனால் பல்கேரியாவில் இன்னும் மூன்று நாட்கள் தான் படப்பிடிப்பு இருக்கிறதாம். அதை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் நான்கு நாட்கள் படபிடிப்பு இருக்கிறதாம். மொத்தம் ஏழு நாட்கள் .அதோடு ஒட்டுமொத்த படப்பிடிக்கும் முடிந்து விடுகிறதாம். இதற்கிடையில் ஆதிக் ரவிச்சந்திரன் இப்போது பல்கேரியாவில் இருப்பதால் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகளை அவருடைய தந்தை கவனித்து வருகிறாராம். அதோடு ஏற்கனவே முடிந்த காட்சிகளுக்கு டப்பிங் ஆரம்பமாகிவிட்டதாம். அதையும் தந்தை தான் கவனித்து வருகிறாராம். இப்படி குட் பேட் அக்லி திரைப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய மும்முறமாக வேலை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.