குட் பேட் அக்லி புக் மை ஷோவில் தரமான சம்பவம்!.. 5 நாளில் இத்தனை லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையா?..

by Saranya M |
குட் பேட் அக்லி புக் மை ஷோவில் தரமான சம்பவம்!.. 5 நாளில் இத்தனை லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையா?..
X

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த வாரம் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படம் தொடர்ந்து ஐந்து நாட்களாக வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. இந்நிலையில் புக் மை ஷோவில் மட்டும் சுமார் 2 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லன நயந்தாரா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து சிலம்பரசன் நடிப்பில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பிரபுதேவவின் பஹிரா போன்ற சில படங்களை இயக்கியிருந்தார். மேலும், ஆதிக் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கியிருந்த மார்க் ஆண்டனி படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்த நிலையில், அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அதில் த்ரிஷா, அர்ஜூன் தாஸ், சுனில், பிரியா வாரியர், பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மார்க் ஆண்டனி படத்தில் பழைய பாடல்களை வைத்திருந்தது ஒர்க்கவுட் ஆனதால் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் அதே ட்ரிக்கை பயன்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஆதிக். அர்ஜுன் தாஸ் மற்றும் பிரியா வாரியர் ஆடிய தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 10ம் தேதி ரீலிஸான குட் பேட் அக்லி இதுவரை 170 கோடி வசூலை உலகளவில் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும், புக் மை ஷோவில் மட்டும் சுமார் 2 மில்லியன் டிக்கெட்டுகள் இந்த படத்திற்காக விற்பனை செய்யபட்டதாக தெரிவித்துள்ளனர். ஒரு டிக்கெட் விலை சுமார் 200 என வைத்தாலும், 20 லட்சம் டிக்கெட்டுகளை கணக்கிட்டாலே 40 கோடி வசூலை ஆன் லைன் டிக்கெட் புக்கிங் ஆப்பான புக் மை ஷோவில் மட்டுமே வசூல் செய்துள்ளது குட் பேட் அக்லி. நேரடியாக தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று டிக்கெட் வாங்கி படம் பார்த்து வரும் நிலையில், தான் தமிழ்நாட்டிலேயே 100 கோடி வசூலை இந்த படம் அள்ளியுள்ளது என்கின்றனர்.

Next Story