மஞ்ச ஜாக்கெட் போட்டு சுல்தானா பாடலுக்கு ஊரே ஆடினால்!.. பிரியா வாரியர் எந்த பாட்டுக்கு ஆடுறாரு பாருங்க!

by Saranya M |
priya varrier
X

குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆனதிலிருந்து சமூக வலைதளத்தில் எங்கே பார்த்தாலும் ”தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” பாடலுக்கு மஞ்சக் கலரு ஜாக்கெட் அணிந்துக் கொண்டு பலரும் நடனமாடி ரீல்ஸ்களை பதிவிட்டு வரும் நிலையில் பிரியா வாரியர் கனிமா பாடலுக்கு நடமாடியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிரியா வாரியர் தானாஹா என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஒரு அடார் லவ், 4 இயர்ஸ், கொல்லா, மந்தாகினி உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்தார். மலையாளப் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கில் சகோ, இந்தியில் யாரியன் 2, கன்னடத்தில் விஷ்ணுப்பிரியா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், நடிகை பிரியா வாரியர் நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரியின் மகன் பவிஷ் நடிப்பில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஒரு அடார் லவ் படத்தில் கண்களை சிமிட்டி வைரலான இவர் மறுபடியும் குட் பேட் அக்லி படத்தில் அர்ஜுன் தாஸுடன் ”தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” பாடலுக்கு ஆடி டாப் டிரண்டிங்கில் இடம்பிடித்து விட்டார்.

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் இரண்டாவதாக சிங்கிளான கனிமா பாடல் வைரலாகிக்கொடிருந்த நிலையில் கடந்த வாரம் வெளியான குட் பேட் அக்லியில் பிரியா வாரியர் ஆடிய தொட்டு தொட்டு பேசும் சுல்தானா அதை ஓவர் டேக் செய்து டிரெண்டாகி வருகிறது. சமூக வலைதளத்தில் பலரும் கனிமா பாடலுக்கு புடவை கட்டி நடனமாடி வந்துக்கொண்டிருந்தனர். அதை தொடர்ந்து பிரியா வாரியர் இடுப்பை ஆட்டி ஆடும் ஆட்டத்தை பார்த்து பல இளம்பெண்களும் தற்போது கவர்ச்சி டான்ஸ் போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரியா வாரியர் மீண்டும் கனிமா பாடலை டிரெண்டாக்கும் வகையில் அந்த பாடலுக்கு ஆடியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அஜித் குமாருக்கு குட் பேட் அக்லி ஹிட் கொடுத்தது போல சூர்யாவுக்கு ரெட்ரோ வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நேரு ஸ்டேடியத்தில் ஆடியோ லாஞ்ச் நடைபெறுகிறது.

Next Story