3 நாளில் முக்கி முக்கி அந்த சாதனையை நெருங்கிய அஜித் குமார்!.. லியோ முதல் நாள் கலெக்ஷனை முந்துவாரா?..

குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமார் வாங்கிய சம்பளத்துக்கே அவர் நடித்த படம் வரும் திங்கட்கிழமை வரை ஓடினால் தான் வசூல் செய்யும் என்கிற நிலைமை உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்த லியோ திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் 145 கோடி வசூலை ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக போஸ்டரை வெளியிட்டது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது என அர்ச்சனா கல்பாத்தியும் அறிவித்திருந்தார். குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் வசூலை அறிவித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் படம் தமிழ்நாட்டில் 30.9 கோடி வசூல் என அறிவித்தது. ஆனால், உலகளவிலான வசூலை அறிவிக்கவில்லை.

தொடர்ந்து 3 நாட்களாக அஜித் ரசிகர்கள் உலகளவில் குட் பேட் அக்லி செய்த வசூல் சாதனையை சொல்லுங்க என தொல்லை செய்து வருகின்றனர். செஞ்சிருந்தா சொல்லமாட்டாங்களாடா என விஜய் ரசிகர்கள் வெறுப்பேற்றி வந்த நிலையில், அஜித் குமார் படங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் ரமேஷ் பாலா சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில், 2.5 நாட்களில் குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 100 கோடி வசூல் செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
அதென்ன பாஸ் இரண்டரை நாள் கணக்கு என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், இதையாவது அஃபிஷியலா சொல்லுங்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்றும் ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர். குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் தொடர்ந்து குறைந்து வருவதாக புக் மை ஷோ ரிப்போர்ட்டுகள் கூறுகின்றன.