மீண்டும் சொல்லி அடித்த ஆதிக்… வெளியான குட் பேட் அக்லியின் முதல் விமர்சனம்… பிரபலம் சொன்ன தகவல்

by Akhilan |   ( Updated:2025-04-09 00:50:51  )
மீண்டும் சொல்லி அடித்த ஆதிக்… வெளியான குட் பேட் அக்லியின் முதல் விமர்சனம்… பிரபலம் சொன்ன தகவல்
X

good bad ugly

Good Bad Ugly: தமிழ் சினிமாவில் அஜித்தின் அடுத்த திரைப்படமாக நாளை வெளியாகும் குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம் குறித்து பிரபல திரை விமர்சகர் அந்தணன் வெளியிட்டு இருக்கிறார்.

அதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டும் பெரிய ஹிட் இதுவரை இல்லாத நிலையில் குட் பேட் அக்லி பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதே கோலிவுட்டின் எண்ணமாக இருக்கிறது.

இந்நிலையில் பிரபல விமர்சகர் அந்தணன் வெளிநாட்டில் குட் பேட் அக்லியினை பார்த்த சென்சார் அதிகாரிகள் சொன்ன தகவல் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி சில நாட்கள் மட்டுமே ஆகி இருக்கிறது.

கிட்டத்தட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்ததால் இப்படம் பெரிய வசூலும் இல்லை. இந்நிலையில் இரண்டே மாதத்தில் குட் பேட் அக்லி நாளை வெளியாகிறது. படத்தின் புரோமோஷன் பணிகளை இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் தொடங்கி விட்டார். பேட்டிகளும் களைக்கட்டி வருகிறது.

ஆனால் எந்த இடத்திலும் ஓவர் பில்டப் கொடுக்காமல் அமைதியாக சிம்பிள்ளாக விஷயத்தை முடித்து விடுகிறார். இது படத்துக்கான பில்டப்பை அதிகரிக்காது. படம் தற்போது வெளிநாட்டில் ரிலீஸ் ஆவதால் அங்குள்ள சென்சார் அதிகாரிகள் படம் பார்த்து சொன்ன ரிவியூக்கள் கசிந்து இருக்கிறது.

அதாவது படம் தரமாக வந்து இருக்கிறதாம். கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு பல ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய வெற்றியை இப்படம் கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. படம் அல்டிமேட்டாக இருப்பதால் கோலிவுட்டுக்கு முக்கிய ஹிட்டாக அமையும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல் தகவலே பாசிட்டிவாக வருவதால் அஜித் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர். ஆனால் மற்ற நடிகர்களின் படங்கள் போல டிக்கெட் பெரிய அளவில் விற்பனை இதுவரை ஆகவில்லை. நாளை படத்தின் முதல் காட்சி முடிவுக்கு பின்னர் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story