வீர தீர சூரனை மொத்தமாக முடித்துவிட்ட குட் பேட் அக்லி!.. தங்கலான் படத்தை விட குறைவான வசூலாம்!..

by Saranya M |
வீர தீர சூரனை மொத்தமாக முடித்துவிட்ட குட் பேட் அக்லி!.. தங்கலான் படத்தை விட குறைவான வசூலாம்!..
X

அஜித் குமார், அர்ஜுன் தாஸ் மிரட்டலான நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் உள்ள மொத்த தியேட்டர்களையும் வாரி சுருட்டிக் கொண்ட நிலையில், சியான் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் வசூல் மொத்தமாக முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தங்கலான் படமே விக்ரமுக்கு 100 கோடி வசூல் படமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 66 கோடி தான் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

கங்குவா மற்றும் வீர தீர சூரன் படங்கள் அடிவாங்கிய நிலையில், கார்த்தி நடித்த வா வாத்தியார் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் அப்படியே தயாரிப்பு நிறுவனம் கிடப்பில் போட்டு விட்டது என்கின்றனர்.

சித்தா படத்தை இயக்கிய அருண் குமார் முதல் பாகத்தை விடாமல் புரட்சி செய்கிறேன் என வீர தீர சூரன் 2ம் பாகத்தை வெளியிட்டார். விக்ரம் ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும் பொதுமக்கள் படத்தை பெரிதாக கொண்டாடவில்லை. அஜித்தின் குட் பேட் அக்லி படம் 2 வாரத்துக்குள் வெளியான நிலையில், தியேட்டர்கள் மொத்தமும் பறிபோய் விட்டன.

இதுவரை இந்தியளவில் வீர தீர சூரன் திரைப்படம் வெறும் 45 கோடி ரூபாய் வசூல் தான் பெற்றுள்ளதாக கூறுகின்றனர். தயாரிப்பு நிறுவனமான எச். ஆர். பிக்சர்ஸ் 52 கோடி வசூல் என போஸ்டர் வெளியிட்ட நிலையில், அதன் பின்னர் அப்படியே அமைதியாகி விட்டனர். சியான் விக்ரமுக்கு அடுத்த படமாவது நல்ல கம்பேக்காக அமைய வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

Next Story