அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், உலக அளவில் குட் பேட் அக்லி திரைப்படம் எந்த அளவுக்கு வசூல் செய்தது என்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
தமிழ்நாட்டை தாண்டி பிற இடங்களில் குட் பேட் அக்லி திரைப்படம் ஓடவில்லை என்றும் அதன் காரணமாகவே தமிழ்நாட்டு வசூலை மட்டுமே பட குழு அறிவித்து வருவதாகவும் விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக உலக அளவில் 200 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூல் செய்துள்ளதாக அஜித் ரசிகர்கள் மறுபுறம் கம்பு சுத்தி வருகின்றனர். இந்நிலையில், படத்தில் தனது மூன்று பாடல்களை எந்த ஒரு ராயல்ட்டியும் கொடுக்காமல் ஆதிக் ரவிச்சந்திரன் வைத்து விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் மீது இளையராஜா 5 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.

இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள், இளையராஜாவே ஐந்து கோடி ரூபாய் கேட்கும் நிலையில், இந்த படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் பல வெளிநாட்டு படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்த பிரபலங்களின் புகைப்படங்களை பயன்படுத்தி அஜித்துக்கு உலக அளவில் மாஸ் இருப்பது போன்ற காட்சிகளை குட் பேட் அக்லி படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் வைத்திருப்பார்.
ஜான் விக், புரொபஸர் மற்றும் டாங் லீ என இஷ்டத்துக்கு உருட்டு உருட்டு சுத்தமான உருட்டு என குட் பேட் அக்லி படத்தில் அஜித் சொல்வதை போலவே படமாக்கியிருப்பார்கள். ஏற்கனவே பிரேக் டவுன் படத்தை அனுமதியில்லாமல் ரீமேக் செய்து கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், இந்த படங்களின் ரெஃபரன்ஸ்களை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளார் ஆதிக் என்றும் அவர்கள் எல்லாம் காப்புரிமை கேட்டால் வந்த மொத்த வசூலை எடுத்து வைத்தாலும் பத்தாது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து குறிப்பிட்ட அந்த படங்களின் நிறுவனங்களையும் டேக் செய்து போட்டுக் கொடுக்கும் வேலையை பார்த்து வருகின்றனர்.