ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மாஸாக இன்று வெளியாகி உள்ள படம் குட் பேட் அக்லி. அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், யோகி பாபு, சைன்டாம் சாக்கோ உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. அந்த வகையில் பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
அஜீத் நடித்த படத்திலேயே அதிகமான வில்லன்கள் நடிச்ச படம் இதுதான். யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் காமெடிக்கு நடித்துள்ளார்கள். பிரியா வாரியரும் நடித்துள்ளார். வில்லன், துணிவுன்னு பல படங்களில் உள்ள அஜீத்தைப் பார்க்கலாம். ஜிவி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
ரொம்ப நல்லவனா இருப்பான். அவனைக் கெட்டவங்க கொட்டி கொட்டி ரொம்ப மோசமானவனா ஆக்குறாங்க. எல்லாத்தையும் வேண்டாம்னு ஒதுங்கி நல்லவனாகணும்கற சமயத்துல மகனுக்காக மறுபடியும் பழைய வேஷத்தைப் போடுறாரு. இதான் கதை. பழிக்குப் பழி வாங்குற கதை. சென்டிமென்ட் நிறைய இருக்கு. அப்பா, மகன், மனைவின்னு சென்டிமென்ட் இருக்கு. திரிஷா அஜீத்துடன் தொடர்ந்து 2வது தடவையா நடிச்சிருக்காங்க. ஆனா திரிஷாவுக்கும், அஜீத்துக்கும் 6வது படம் என்பது என்னோட கணிப்பு.

அஜீத் இதுல நாலு கெட்டப். இளைஞர், டான், சாதாரண கெட்டப்னு வாராரு. கோட்டுக்கே படத்துல பல லட்சங்கள் செலவு செய்ததா ஆதிக் சொன்னாராம். அஜீத்தே இந்தப் படத்தைப் பார்த்து ஆதிக்கைப் பாராட்டினாராம். அதனால அஜீத் ரசிகர்கள் கொண்டாடுற படமா இருக்கும். இந்தப் படத்துல பைட்ல நல்லா நடிச்சிருக்காரு. சிம்ரன் இந்தக் கேரக்டர்லயும் நடிப்பாராங்கற மாதிரி இருக்கு. அர்ஜூன்தாஸ் நடிப்பு இன்னொரு ரகுவரனைப் போல இருக்கு. ஜாக்கி ஷெராப், ஷான் சாக்கோ நடிப்பு சூப்பர்.
படம் பார்க்கும்போது அடுத்து என்ன என்ற பரபரப்பை ஆதிக் ரவிச்சந்திரன் ஊட்டி இருக்கிறார். சண்டைக்காட்சிகளுக்காகவே மீண்டும் பார்க்கலாம். புஷ்பா 2 படம் மாதிரி இதுவும் வசூலை அள்ளிக் கொடுக்கப் போகுது. பாட்ஷா, வில்லன் வரிசையில் இந்தப் படமும் அஜீத்துக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரமாரியான வெற்றியைத் தரும். டிக்கெட் புக்கிங் ஓபன் பண்ணின 2 நாள்லயே 80 கோடி கலெக்ஷனை அள்ளிடுச்சு. இடைவேளையில் ரசிகர்கள் கும்மாளம் போடுவாங்க.
கமர்ஷியல்னாலே பேமிலி ஸ்டோரி இருக்கும். மணிரத்னம், கேஎஸ்.ரவிக்குமார் படங்கள் அப்படித்தான் ஹிட் அடிக்கும். அந்த பார்முலாவை ஆதிக் இந்தப் படத்துல முழுமையா எடுத்திருக்காரு. ஆதிக் எப்பவுமே ரசிகரோடு ரசிகரா இருந்து டைரக்ட் பண்ணிருக்காரு. நிச்சயம் இது சூப்பர்ஹிட்டாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.