விஜய் அஜித் ரசிகர்களை ஒன்னா சேர்த்த குட் பேட் அக்லி!.. இப்படியே இருந்தா நல்லது!….

by சிவா |   ( Updated:2025-04-11 01:12:09  )
vijay ajith
X

விஜய் - அஜித் ரசிகர்களுக்கு இடையே சண்டை என்பது பல வருடங்களாகவே இருக்கிறது. 80,90களில் ரஜினி - கமல் ரசிகர்களிடையே இருந்த மோதல் அதன்பின் விஜய் - அஜித் ரசிகர்களின் மோதலாக மாறியது. கடந்த 20 வருடங்களுக்கும் மேல் இவர்கள் மோதிக்கொண்டு வருகிறார்கள்.

அதுவும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் வந்த பின் அதுவே சண்டை போடும் களமாக மாறியது. அஜித்தை மோசமாக விமர்சித்து விஜய் ரசிகர்கள் திட்டுவது, விஜயை மோசமாக விமர்சித்து அஜித் ரசிகர்கள் திட்டுவதும், அசிங்கமான ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அதை டிரெண்டிங் செய்வதும் தொடர்ந்து வந்தது.

அதோடு, விஜய் படம் வெளியாகும் போது அப்படத்தை அஜித் ரசிகர்கள் மோசமாக விமர்சிப்பதும், அஜித் படம் வெளியாகும்போது விஜய் ரசிகர்கள் அதையே செய்வதும் என டிவிட்டரே களேபரமாகியது. ‘ஒருவரை பாராட்டி பேச மற்றொருவாரை’ திட்டாதீர்கள் என அஜித் சொல்லியும் அவரின் ரசிகர்கள் கேட்கவில்லை.

ஆனால், குட் பேட் அக்லி படம் விஜய் - அஜித் ரசிகர்களை ஒன்றிணைத்திருக்கிறது. எப்படியெனில் மதுரையில் ஒரு தியேட்டரில் விஜய் முகம் பாதி. அஜித் முகம் பாதி என உருவாக்கி பேனரும், கட் அவுட்டும் வைத்து ‘நீ நானும் ஒன்னுடா’ என வாசகத்தை விஜய் ரசிகர்கள் எழுதியிருக்கிறார்கள்.

மேலும் குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக விஜய் ரசிகர்கள் நெகட்டிவான கருத்துக்களை டிவிட்டரில் போடவே இல்லை. படத்திற்கு எதிராக எந்த ஹேஷ்டேக்கையும் அவர்கள் டிரெண்டிங் செய்யவில்லை. படம் ஓடாது என பதிவிட்டு சந்தோசப்படவில்லை. அது மட்டுமில்லை. விஜய் ரசிகர்களுக்கே குட் பேட் அக்லி மிகவும் பிடித்திருக்கிறது. நான் விஜய் ஃபேன். ஆனா என் ஃபிரண்ட் அஜித் ஃபேன். அவன் கூட போய் படம் பார்த்தேன். படம் செமயா இருந்தது’ என பல விஜய் ரசிகர்களும் சொல்கிறார்கள்.

மொத்தத்தில் விஜய் - அஜித் ரசிகர்களுக்கு இடையே இருந்த மோதலை குட் பேட் அக்லி படம் முடித்து வைத்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இது இப்படியே தொடரட்டும் என்பது பலரின் எண்ணமாக இருக்கிறது.

Next Story