‘விடாமுயற்சி’ கற்றுக் கொடுத்த பாடம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘குட் பேட் அக்லி’!

by Rohini |
ajith
X

ajith

Good Bad Ugly: அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி படம் எப்படியும் இந்த வருடம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போதைக்கு அந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கின்றனர். படக்குழுவுக்கும் லைக்காவுக்கும் என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை. ஒரு பக்கம் லைக்காவின் பொருளாதார நெருக்கடி தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இருந்தாலும் லைக்கா நிறுவனத்தால் மற்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் அஜித்தே லைக்கா நிறுவனத்திடம் நேரடியாக பேசி ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தான் இணைய போவதாகவும் படத்தை முடித்த பிறகு தான் விடாமுயற்சி படத்திற்கு வருவேன் என்றும் கூறி இப்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: ஆமா நான் அப்படிதான்… எனக்கு பெருமையா இருக்கு… சுச்சி வீடியோவுக்கு ரிப்ளே கொடுத்த கணவர்…

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. ஆரம்பமே அமர்க்களம் என்பது போல முதல் காட்சி சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பித்திருக்கிறார் ஆதிக்ரவிச்சந்திரன். ஏற்கனவே நேற்று தெலுங்கானாவில் தேர்தல் என்பதால் இரண்டு நாட்கள் மட்டும் ஷூட்டிங் முடித்துவிட்டு தேர்தல் எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பிற்கு விடுமுறை அளித்து மீண்டும் இன்றிலிருந்து படப்பிடிப்பை தொடங்கி இருக்கின்றனர்.

ஒரே கட்டப்படப்பிடிப்பாக ஜூன் ஏழாம் தேதி வரை குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விடா முயற்சி படத்தில் என்னென்ன தவறுகள் இருந்ததோ அதை இந்த படத்தில் நடக்காதவாறு சரி செய்து கொள்வார்கள் என்று தெரிகிறது. எப்படியும் இந்த வருடத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு பொங்கல் அன்று படத்தை ரிலீஸ் செய்ய ஆதித் ரவிச்சந்திரன் ஒரே குறிக்கோளில் இறங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: திணறும் ஜேசன் சஞ்சய்!.. எஸ்கேப் ஆகும் நடிகர்கள்!.. ஒரு வருஷம் ஆகியும் ஒன்னும் நடக்கலயே பாஸ்!..

Next Story