குட் பேட் அக்லி: 5 நாட்களில் இவ்ளோ முன்பதிவா?!.. அப்ப 100 கோடி கன்பார்ம்!.

by சிவா |   ( Updated:2025-04-09 05:56:30  )
good bad ugly
X

good bad ugly

Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படம் இது. அதற்கு காரணம் டீசர் மற்றும் டிரெய்லரில் இடம் பெற்றிருந்த காட்சிகள்தான். பில்லா, மங்காத்தா படத்திற்கு பின் அஜித்தை மிகவும் மாஸாக காட்டியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனரானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன்பின் அவர் இயக்கிய சில படங்கள் ஓடவில்லை. சிம்புவை வைத்து இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படமும் அவர் நினைத்தபடி உருவாகவில்லை. அதன்பின் சில மொக்கை படங்களை இயக்கினார். நேருக்கு நேர் படத்தில் நடித்தபோது அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டது.

#image_title

‘ஒரு நல்ல படம் பண்ணிட்டு வா. நாம சேர்ந்து படம் பண்ணுவோம்’ என அஜித் சொல்ல அதே உற்சாகத்தில் ஆதிக் இயக்கிய படம்தான் மார்க் ஆண்டனி. இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்க இப்போது குட் பேட் அக்லி சாத்தியமாகி இருக்கிறது. பக்கா ஆக்‌ஷன் கேங்ஸ்டர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன் தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் நாளை காலை 9 மணிக்கு இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. எனவே, இப்படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எனவே, ஆன்லைன் புக்கிங்கும் களைகட்டி வருகிறது.

ஏப்ரல் 4ம் தேதி முன் பதிவு தொடங்கிய நிலையில் அன்றே 68.16 ஆயிரம் டிக்கெட்டுகளும், 5ம் தேதி 59.1 ஆயிரம் டிக்கெட்டுகளும், 6ம் தேதி 57.31 ஆயிரம் டிக்கெட்டுகளும், 7ம் தேதி 88.9 ஆயிரம் டிக்கெட்டுகளும், 8ம் தேதி 156.54 ஆயிரம் டிக்கெட்டுகளும் புக்கிங் செய்யப்பட்டிருக்கிறது. ஆன்லைன் புக்கிங்கை பார்க்கும் கண்டிப்பாக இப்படம் முதல் நாளிலேயே 100 கோடி வசூலை குட் பேட் அக்லி தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story