தமிழ்நாட்டுல மட்டும்தான் வசூல்!.. மத்த எல்லா இடத்திலும் ஃபிளாப்!. உடைச்சி சொல்லிட்டாரே!…

Good bad ugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இதற்கு முன்பு வெளியான விடாமுயற்சி படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக அமையவில்லை. ஏனெனில் அஜித் ரசிகர்கள் அவரிடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது எதுவும் படத்தில் இல்லை. அது இல்லை என்றாலும் பரவாயில்லை. வில்லன் குரூப்பிடம் அஜித் அடிவாங்குவது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
ஆனால் கடந்த 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களுக்கு ஒரு முழு விருந்தாக அமைந்திருக்கிறது. படம் முழுக்க பக்கா மாஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்து. ஆதிக் ஒரு அஜித் ரசிகர் என்பதால் அவர் அஜித்தை எந்த படங்களில் எல்லாம் அதிகம் ரசித்தாரோ அது எல்லாவற்றையும் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
எனவே இந்த படம் அஜித் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. எனவே, ரிப்பீட் மோடில் படத்தில் பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்திருக்கிறார். படம் வெளியான முதல் நாள் இந்த படத்தில் கதை இல்லை, லாஜிக் இல்லை, ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்க மாட்டார்கள் என நெகட்டிவ் கமென்ட்ஸ்கள் வந்தது.
ஆனால், அடுத்த நாளே மொத்த விமர்சனமும் மாறிப்போனது. லாஜிக் பார்க்காமல் ஜாலியாக என்ஜாய் பண்ணிவிட்டு வரலாம் என சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டார்கள். எனவே, தமிழகத்தில் இப்படம் நல்ல வசூலை பெற்றது. முதல் நாளே இப்படம் 30.9 கோடி வசூல் செய்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. படம் வெளியாகி 5 நாட்களில் இப்படம் 150 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

எப்படியும் இன்னும் ஒரு வாரத்திற்கு குட் பேட் அக்லி படத்திற்கு வசூல் இருக்கும். ஏனெனில், இன்றோடு பத்தாம் வகுப்பு தேர்வுகளும் முடிவடையவுள்ளது. எனவே, இந்த வார இறுதிக்குள் இப்படம் 200 கோடி வசூலை தாண்டி விடும் என கணிக்கப்படுகிறது. அதேநேரம், வலைப்பேச்சு பிஸ்மி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
குட் பேட் அக்லி படம் தமிழ்நாட்டில் மட்டுமே வசூலை பெற்றிருக்கிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இப்படம் வசூலை பெறவில்லை. வெளிநாட்டில் மட்டுமே 20 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது’ என தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் மட்டும் இப்படம் 5 நாட்களில் 100 கோடியை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது