ஒரு பஸ்ஸ விடல.. புரோமோஷனை ஆரம்பித்த குட் பேட் அக்லி.. எங்கு பார்த்தாலும் தலதான்

ajith
வரும் ஏப்ரல் பத்தாம் தேதி அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் பிரசன்னா, தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஒரு பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார் .
முதலில் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்தது. தயாரிப்பு நிறுவனத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்ததால் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் விலகினார் .படத்தில் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் படத்திற்கான முன் பதிவு துவங்கியிருக்கிறது.
அஜித் படம் என்றாலே முன்பதிவில் அவருடைய படங்கள் மாஸ் காட்டிவிடும். அப்படித்தான் குட் பேட் அக்லி படத்திற்கும் முன்பதிவில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை இந்த படம் உலக அளவில் 10 லட்சத்திற்கும் மேல் வசூலை முன்பதிவிலேயே அள்ளிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான அஜித் படங்களில் இந்தப் படம் தான் ஒரு சிறந்த ஓப்பனிங் படமாக பார்க்கப்படுகிறது.
அதிலும் இந்த படத்தில் இதுவரை பார்க்காத அளவில் அஜித் எல்லா படங்களிலும் இருக்கும் கேரக்டர்களை ஒன்று சேர்த்து காட்டியுள்ளார். அதுவே படத்திற்கு ஒரு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே அதனுடைய புரமோஷன் வேற லெவலில் இருக்கும்.

அது மாதிரி தான் குட்பேட்அக்லி படத்தின் ப்ரோமோஷனையும் ஆரம்பித்திருக்கிறார்கள் .ஜாம் மீடியா என்ற ஒரு ஏஜென்சி தமிழ்நாட்டில் இந்த படத்தை புரமோஷன் செய்ய ஆர்வம் காட்டியிருக்கிறது. அந்த நிறுவனம்தான் இப்போது இந்த படத்தை எல்லா இடங்களிலும் கொண்டு சேர்க்க ஒரு வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பேருந்துகளில் குட்பேட்அக்லி படத்தின் போஸ்டரை ஒட்டி எங்கு பார்த்தாலும் இந்த படத்தின் போஸ்டராக தான் தெரிகிறது. அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/jammedia18/status/1905133252500938886