குட் பேட் அக்லி கதையை நிராகரித்த பிரபல நடிகர்... பதிலா வந்த ஹிட் படம்தான் மாஸ்

Mark Antony: அஜித்தின் விடாமுயற்சி அப்டேட்டுகள் ஒருபுறம் வந்துகொண்டே இருந்தாலும், ஒரே சமயத்தில் அஜித் இன்னொரு படத்திலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி’.

நீண்ட வருடங்களுக்குப் பின் அஜித் இந்த இரண்டு படங்களுக்காகவும் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்து வருவதாக அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியும் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் வெளியான பல அஜித் படங்களுக்கும் இல்லாத குறிப்பிட சில சிறப்புகள் இந்த குட் பேட் அக்லி படத்துக்கு இருக்கிறது.

இதையும் படிங்க: எலே இது வேட்டையன் இல்ல அடுத்த தர்பாராம்.. லீக்கான வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்

அவை ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா? முன்னெப்போதும் இல்லாத வகையில், அஜித்தின் ஒரு படத்தின் அறிவிப்பின்போதே, இது பொங்கலுக்கு ரிலீஸாகும் என்ற தகவலோடு வந்தது அஜித் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்தது. இதில், அப்படி என்ன சிறப்பு என்று கேட்பவர்களுக்கு, நம் சென்னை ரசிகர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி தொடங்கி உலக அளவில் வலிமை அப்டேட் என்று கேட்ட விவகாரத்தைச் சொல்லலாம்.

#image_title

அதன்பின், வீரம் இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத், துணிவு சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டர், துணிவு - மார்க் ஆண்டனி எடிட்டர் விஜய் வேலுக்குட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் அஜித்துடன் கைகோர்த்திருக்கிறார். அதேபோல், ரெட் படத்துக்குப் பின் கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பின் அஜித் படத்துக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: பிரேம்ஜி பார்க்க வரதே இல்லை… கல்யாணத்துக்கு பின் எல்லாம் மாறிச்சு… அண்ணனா ஃபீலிங்கா?

மேலும், இந்தப் படத்தில் அஜித் மூன்று ரோல்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கதை கிராமத்தில் இருந்து தொடங்கி நகரம், வெளிநாட்டுப் பின்னணி என பயணிக்கும் கேங்ஸ்டர் கதை. ஆதிக் ரவிச்சந்திரன் ஜப்பானில் லொகேஷன் பார்த்துவிட்டு வந்ததாவும் தகவல் கோலிவுட்டில் பேசப்படுகிறது.

மாஸான ஆக்‌ஷன் படமாக குட் பேட் அக்லி உருவாக இருக்கிறது. போஸ்டரிலேயே துப்பாக்கி, ரத்தம் ஆயுதம்னு இதற்கான குறியீடு வைக்கப்பட்டிருக்கிறது. இதில், முக்கியமான இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள். மார்க் ஆண்டனி படத்துக்காக விஷாலுக்கு சொல்லப்பட்ட இரண்டு கதைகளில் இதுவும் ஒன்றாம். விஷால் மார்க் ஆண்டனி கதையைத் தேர்வு செய்யவே, அஜித் குட் பேட் அக்லி கதையைத் தேர்வு செய்திருக்கிறார்.

Related Articles
Next Story
Share it