என்னதான் குட்டா இருந்தாலும் பேடா பாக்கத்தான் ஆசைப்படுறாங்க! சாதனை படைத்த அஜித்

good
Good Bad Ugly: அஜித் நடிப்பில் வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகக்கூடிய திரைப்படம் குட் பேட் அக்லி. இதுவரை இல்லாத அளவு அஜித்தின் இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. நாளுக்கு நாள் இந்த படத்தைப் பற்றிய ஹைப் அதிகரித்துக் கொண்டு இருக்க சில பேர் இது ஓவர் பில்டப் ஆக இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் ஓவர் பில்டப் என்பதையும் தாண்டி ஒரு இயக்குனரின் நம்பிக்கை என்று சொல்லலாம். ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய படம் மார்க் ஆண்டனி. விஷாலின் மார்க்கெட் அப்படியே விழுந்து கிடந்த பொழுது அவருடைய மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியவர் ஆதிக்.
அப்படியான ஒரு சம்பவத்தைத்தான் குட் பேட் அக்லி படத்திலும் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கேரளாவில் காலை எட்டு மணி காட்சியாக தான் படம் வெளியாக போகிறது. கர்நாடகாவில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை. நான்காம் தேதியிலிருந்து முன்பதிவு தொடங்க இருக்கிறது. இதைப்பற்றி ஒருவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் சர்வரே டவுன் ஆக போகிறது என்று கூறியிருந்தார். ஏனெனில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம். இதையெல்லாம் தாண்டி ஓவர் சீஸில் முக்கியமாக ஐரோப்பாவில் தெறிக்க விட்டார்கள்.
எல்லா ஸ்கிரீன்களிலும் குட் பேட் அக்லி திரைப்படம் தான் ஒளிபரப்பாக போகிறது. எல்லா டிக்கெட்டும் விற்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் டிக்கட் ஓபன் பண்ணி சிறிது நேரத்தில் 25 லட்சம் டிக்கெட் விற்பனையாகி இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி ஒன்பதாம் தேதி பிரிமியர் ஷோ இரவு நேரத்தில் அமெரிக்காவில் ஓப்பன் செய்கிறார்கள் . இதற்கிடையில் படத்தின் டிரைலர் எப்பொழுது வரும் என்பதுதான் அனைவரின் ஆர்வமாக இருக்கிறது .நாளை முன் பதிவு தொடங்கும் நேரத்தில் இதுவரைக்கும் டிரைலர் வெளியாகவில்லை.
அஜித்தை பல படங்களில் குட்டாக பார்த்தாச்சு. பேட் மற்றும் அக்லியாக அஜித்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு மனுசனை சீண்டி விட்டோம் என்றால் பேட் என்பதையும் தாண்டி அவன் அக்லியாக எப்படி இருப்பான் இப்படி எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அக்லி கேரக்டரில் அப்படி என்னதான் இருக்கிறது என இதுவரைக்கும் எதுவுமே தெரியவில்லை. இதற்கு முன் டீசர் வெளியாகி அமளித்துமிளியானது. எதிர்பார்க்காத ஒரு அஜித்தை இந்த படத்தில் பார்க்கப் போகிறோம் என டீசரிலேயே காட்டி விட்டார்கள் .

இதுவரைக்கும் பார்த்த எல்லா அஜித்தையும் இந்த படத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டார். அப்போ ட்ரெய்லர் எப்படி இருக்கும் என்பது தான் இப்போது அனைவருக்கும் ஆன ஒரு எதிர்பார்ப்பு. இது எல்லாம் தாண்டி உலகம் முழுக்க மொத்தம் 5000 திரைகளில் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. அப்படி பார்க்கும் பொழுது ஒரே நாளில் உலகம் முழுவதும் 120 கோடி வசூல் எதிர்பார்க்கப்படுகிறது. அப்போ 5 நாட்களில் 600 லிருந்து 650 கோடி வரை எதிர்ப்பார்க்கலாம். இது ஜெயிலருக்கு இணையான வசூலாக எதிர்பார்க்கப்படுகிறது .அஜித் கேரியரில் இந்த படம் ஒரு பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.