அஜித் ஃபேன்ஸ் மட்டும் பார்க்கலாம்!.. இப்படி பண்ணிட்டியே ஆதிக்கு!. குட் பேட் அக்லி டிவிட்டர் ரிவ்யூ!….

by சிவா |   ( Updated:2025-04-09 21:03:06  )
good bad ugly
X

Good bag ugly: ஆதிக் ரவிச்சந்தின் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என எல்லா மாநிலங்களிலும் முதல் காட்சி காலை 9 மணிக்கும், கர்நாடகாவில் காலை 8.30 மணிக்கும் படம் வெளியாகவுள்ளது.

விடாமுயற்சி படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் குட் பேட் அக்லியை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அவர்களை டெம்ப்ட் பண்ணும் விதத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் செம மாஸான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. எனவே, படம் எப்படா வரும் என ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இந்த படம் ஓடினால் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அடுத்த படம் கொடுக்கும் முடிவிலும் அஜித் இருக்கிறார்.

வெளிநாட்டில் மட்டும் இன்று காலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியாகியுள்ளது. எனவே, படம் பார்த்தவர்கள் இப்படம் எப்படி இருக்கிறது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு ‘அஜித் எனர்ஜியோட இருக்கார்.. பல பில்டப் காட்சிகள்.. ஸ்லோ மோஷனில் நடக்கிறார்..


சண்டையும் போடுகிறார்.. ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்.. படத்தில் கதையும் இல்ல.. எமோஷனும் இல்ல.. இண்டர்வெல் பிளாக் நன்றாக இருக்கிறது’ என பதிவிட்டிருந்த ரசிகர், இரண்டாம் பாகத்தையும் பார்த்துவிட்டு ‘ரசிகர்களுக்கு Good.. பொதுவான ரசிகர்களுக்கு Bad… ஹேட்டர்ஸுக்கு Ugly..’ என பதிவிட்டிருக்கிறார். அவர் சொல்லியிருப்பதை பார்க்கும்போது படத்தின் 2ம் பாதி நன்றாக இல்லை என புரிந்துகொள்ள முடிகிறது.

இன்னொருவரோ ‘படத்தில் லாஜிக் இல்லை. ஆனால், அஜித்துக்காக பார்க்கலாம். படம் முழுக்க அஜித்தின் பழைய படங்களின் ரெப்ரன்ஸ் வருகிறது.. பிளாஷ்பேக் நன்றாக இருக்கிறது. முழுக்க அஜித்தோட மேஜிக்’ என பதிவிட்டிருக்கிறார். படம் முழுக்க பொழுதுபோக்கு மட்டுமே.. ஜிவி பிரகாஷின் இசை சிறப்பாக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார். முதல் பாகம் ரசிகர்களுக்காக மட்டுமே.. இரண்டாம் பாதியில் அதுவும் இல்லை.. ஆதிக் ஒரு நல்ல வாய்ப்பை வேஸ்ட் பண்ணிவிட்டார் என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

வருகிற ரிசல்ட்டை பார்க்கும் போது குட் பேட் அக்லி எதிர்பார்த்த வெற்றியை பெறுமா என சந்தேகமே!…

Next Story