அடுத்த சிங்கிளும் ரெடி.. தயாரா இருங்க தல ஃபேன்ஸ்.. வாரம் முழுக்க கொண்டாட்டம் தான்

single
குட் பேட் அக்லி: அஜித் நடிப்பில் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடா முயற்சி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் படத்தின் மீது அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆறாவது முறையாக சேர்ந்த ஜோடி: இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷாவே கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதன் மூலம் அஜித் திரிஷா ஆறாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், பிரசன்னா ,அர்ஜுன் தாஸ் என பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
ப்ரீ புக்கிங்கில் சாதனை: படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் படத்தின் முதல் பாடலான ஓ ஜி பாடலும் வெளியாகி பெரிய சம்பவத்தை செய்தது. இந்த நிலையில் ப்ரீ புக்கிங்கில் பெரும் வசூலை இந்த படம் குவித்து வருவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதுவரை ப்ரீ புக்கிங்கில் 20 லட்சம் வரை இந்த படம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.
இனி கொண்டாட்டம்தான்: இதனால் முதல் நாள் இந்த படம் வெளியாகி உலக அளவில் ஒரு மாபெரும் வசூல் சாதனையை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் படத்தை பற்றிய மற்றொரு தகவலும் வெளியாகி இருக்கிறது. இனி வரும் வாரங்களில் படத்தின் இரண்டாவது பாடலும் டிரைலரும் வர வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அது சம்பந்தமான ப்ரோமோ வீடியோ இன்று மாலை 5.50 க்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.படம் ரிலீஸ் ஆக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த நாள்களில் படத்தைப் பற்றிய ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டமாக தான் இருக்க போகிறது.

வெளியாக கூடிய இரண்டாவது பாடல் அஜித் ஜெயிலில் ஆடும் பாடலாக இருக்கலாம் அல்லது திரிஷா சம்பந்தப்பட்ட பாடலாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. படத்தில் அஜித் பல்வேறு கெட்டப்களில் வருவதால் கண்டிப்பாக இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாகத்தான் இருக்கப் போகிறது. கதையை விட இந்த கெட்டப்புக்காகவே படத்தை வெற்றியடைய செய்து விடுவார்கள் அஜித் ரசிகர்கள்.