
Cinema News
ஆலுமா டோலுமாலாம் ஓரம்போ!.. குட் பேட் அக்லியில் அஜித் ஆடப்போற குத்தாட்டத்த பார்க்க ரெடியா?..
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். அவர் நடிப்பில் அடுத்து வர இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விடாமுயற்சி. கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றது .லைக்கா நிறுவனத்திற்கு தொடர்ந்து சறுக்கலே வந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் லைக்காவை பாதாளத்தில் இருந்து மீட்டெடுக்கும் என நம்பி இருந்தனர்.
ஆனால் எதிர்பார்த்த அளவு விடாமுயற்சி திரைப்படம் வசூலை பெற முடியவில்லை. விமர்சன ரீதியாகவும் சுமாரான வரவேற்பை பெற்றது .வசூலிலும் எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த நிலையில் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகயுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
படத்தின் டீசர், முதல் சிங்கிள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். டீசர் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. முதல் பாடலும் அஜித் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படம் கண்டிப்பாக ஒரு மாஸ் ஹிட் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நடிகராக ஒரு பக்கம் தன்னுடைய வேலையை செய்து கொண்டாலும் இசையமைப்பாளராகவும் ஜி.வி பிரகாஷ் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அவருடைய இசையில் சமீபகாலமாக வெளியான படங்கள் அனைத்தும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வரும் நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு பாடலை போட்டிருப்பார் என நம்பி இருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது .
ஏற்கனவே அஜித் இந்த படத்தில் பல கெட்டப்பில் நடித்து இருக்கிறார். அதில் கைதி உடை அணிந்து ஜெயிலில் இருப்பது போல ஒரு காட்சி இருக்கும். அதே ஜெயிலில் வார்டன் உடை அணிந்தும் இருப்பது போல ஒரு காட்சி இருக்கும். வெளியாகப் போகும் இரண்டாவது பாடல் ஜெயிலுக்குள் இருந்து ஆடுவது மாதிரியான ஒரு பாடல் என சொல்லப்படுகிறது .அதனால் கண்டிப்பாக இது ஒரு குத்து பாடலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.