Good Bad Ugly:கெரியர் பெஸ்ட்டா இருக்கும்.. ‘குட் பேட் அக்லி’ பற்றி ஜிவி போட்ட பதிவு! செம அப்டேட்

ajith
Good bad ugly: தற்போது அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் தற்போது ஐரோப்பாவில் நடக்கும் கார் ரேஸில் கலந்து கொள்ள தீவிரமாக பயிற்சிகளை எடுத்து வருகிறார் அஜித்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தில் அஜித்தை தவிர மற்ற நடிகர்கள் யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த படத்திற்கு முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் இப்போது தேவி ஸ்ரீ பிரசாத் படத்திலிருந்து விலகிவிட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக அனிருத்தை இந்த படத்திற்கு இசையமைக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடந்ததாகவும் சொல்லப்பட்டது .
ஆனால் அனிருத்தும் அவருடைய கால்ஷீட் காரணமாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் இசையமைக்க முடியாது என மறுத்துவிட்டார். அதன் பிறகு ஜி வி பிரகாஷிடம் கால்ஷீட் கேட்டிருக்கின்றனர். ஜி வி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்க சம்மதித்து விட்டார். ஏற்கனவே அஜித்தின் கிரீடம் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
அந்த படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் .அதன் பிறகு குட் பேட் அக்லி படத்தில் தான் மீண்டும் ஜிவி பிரகாஷ் அஜித் உடன் இணைந்திருக்கிறார். அதனால் இந்த படத்திலும் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் ஜிவி பிரகாஷ் இணைந்தது அஜித் ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் வெளியான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று இருந்தன. குறிப்பாக இந்த இரு படங்களிலும் அமைந்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியது.

Ajith
இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைத்தவர் ஜி வி பிரகாஷ். அதனாலயே குட் பேட் அக்லி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார் என தெரிந்ததும் அஜித் ரசிகர்கள் அவருக்கு வணக்கம் போட ஆரம்பித்து விட்டனர்.
இதில் ஒரு ரசிகர் இந்த படத்தை பற்றி ஜிவி பிரகாஷிடம் எக்ஸ் தளத்தில் கேட்டபோது அதற்கு ஜிவி பிரகாஷ் கேரியர் பெஸ்ட் என பதிலளித்திருக்கிறார் அந்த ஒரு பதிவு தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.