ஷூட்டிங்கே இப்போதான் ஆரம்பிச்சிருக்கு… அதுக்குள்ள ஓடிடியில் சம்பவம் செய்த அஜித்குமார்…

by Akhilan |   ( Updated:2024-05-22 07:54:09  )
ஷூட்டிங்கே இப்போதான் ஆரம்பிச்சிருக்கு… அதுக்குள்ள ஓடிடியில் சம்பவம் செய்த அஜித்குமார்…
X

Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஓடிடி விற்பனை குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரொம்ப காலம் கழித்து அஜித்தின் கம்பேக்காக இது இருக்கும் என பேசப்பட்டு வருகிறது.

விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் பெருவாரியாக முடிந்துவிட்டாலும் இறுதி கட்டத்தை இன்னும் பட குழுவால் நடத்தி முடிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு மேல் இருந்தால் இந்த வருடம் எந்த படமும் ரிலீஸ் ஆகாமல் போய்விடும் என நினைத்த அஜித் உடனே அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கினார்.

இதையும் படிங்க: ட்ராமா போடும் ஈஸ்வரி.. கடுப்பில் ராதிகா மற்றும் கமலா… குழம்பி போய் நிற்கும் கோபி! தேவைதான்…

அந்த வகையில் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் வெற்றியை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனை தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனராக அறிவித்தார். இப்படத்தை தெலுங்கு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார்.

படத்தின் டைட்டில் அறிவிப்பை பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், ரௌடி லுக்கில் மூன்று வேடத்தில் நடிக்க இருக்கும் அஜித் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. ரொம்ப நாட்களாகவே அலப்பறை இல்லாத அமைதியான கேரக்டரில் நடித்து வந்த அஜித் மீண்டும் தன்னுடைய கமர்சியல் ஃபார்முலாவுக்கு திரும்பி இருப்பதாகவும் ரசிகர்கள் கிசுகிசுகின்றனர்.

இதையும் படிங்க: ஜெய்சங்கர் செய்ததை பாடமாக எடுத்து கொண்டேன்!.. கமல்ஹாசன் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் 95 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது. இது படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு மடங்கு என கூறப்படுகிறது. அஜித்தின் குட் பேட் அக்லியை விட விஜயின் கோட் திரைப்படத்துக்கு 110 கோடி வரை கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் கொடுத்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் சூட்டிங் இந்த வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. முதல் கட்டமாக விறுவிறுப்பான சண்டை காட்சிகளை படமாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்து இருக்கிறார். துணிவு படத்திற்கு பிறகு ஓராண்டுகளை கடந்த நிலையில் இதுவரை அஜித்தின் படம் எதுவும் வெளியாகாமல் இருப்பதால் இப்படத்தின் மீதும் ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றனர்.

Next Story