குட் பேட் அக்லி ரிலீஸை வைத்துக்கொண்டு மைத்ரி மூவி மேக்கர்ஸின் திடீர் பிளான்… விஜய் வெறுப்பாக போறாரு!

Good Bad Ugly
Good Bad Ugly: அஜித் குமார் நடிப்பில் அடுத்த திரைப்படமாக ரிலீசாக இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் தயாரிப்பு நிறுவனம் செய்ய இருக்கும் விஷயம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
கடந்த சில வருடங்களாகவே அஜித்குமார் ரசிகர்கள் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அப்டேட் கேட்டு வெறுத்துப் போய் அடைந்த காலம் இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கு வகைவகையாக அப்டேட்கள் குவிந்து கொண்டு வருகிறது.
விடாமுயற்சி வெளியாகி ஒரு மாதம் கடந்திருக்கும் நிலையில் அடுத்த திரைப்படமான குட் பேட் அக்லி ரிலீஸை நோக்கி நகர்ந்து வருகிறது. ஏப்ரல் 10ந் தேதி இப்படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டு இருக்கிறது. சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில் மூன்றாவது சிங்கிள் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதே நாளில் மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இன்னொரு படத்தையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம். பொதுவாக ஒரு தயாரிப்பு நிறுவனம் இது போன்ற சூழலில் ஒரு படத்தை வெளியிட்டவே பெரிய அளவில் திக்கு முக்காடி போய்விடுவார்கள்.
ஆனால் இந்நிறுவனம் அஜித் போன்ற ஒரு நடிகரின் திரைப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் இப்படி ஒரு முடிவெடுத்து இருப்பது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்திருக்கிறது. தமிழில் இல்லையாம் இந்தியில் வெளியிட இருக்கிறார்களாம். சன்னி தியோல் நடிப்பில் ஜாட் என்ற திரைப்படம் தானாம்.
இப்படத்தினை கோபிசந்த் மல்லிநேரி இயக்கி இருக்கிறார். இவர் தெலுங்கில் மிகப்பெரிய இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் ஜாட் படத்தின் கதையை கோபிசந்த் முதலில் தளபதி விஜய்யிடம் தான் தெரிவித்திருக்கிறார்.
அவருக்கும் கதை கேட்டு பிடித்து விட்டதாம். ஆனால் படம் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு நகராமல் அப்படியே நின்று விட்டதாம். இதைத்தொடர்ந்து சன்னி தியோல் இப்படத்தில் இணைந்து படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஒருவேளை படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தால் கண்டிப்பாக தளபதி விஜய் ஃபீல் செய்ய நேரிடலாம்.