இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்டு… திடீர் ட்விஸ்ட் கொடுத்த குட் பேட் அக்லி டீம்…

Published On: November 19, 2024
ajithkumar
---Advertisement---

Ajith: நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் விஷயத்தில் விடாமுயற்சி டீமுக்கு ஷாக் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள்  மோதிக்கொண்டன. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தொடர்ச்சியாக தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் அஜித் சில காலம் உலக சுற்றுலா சென்று இருந்தார்.

இதையும் படிங்க: பாகுபலி மாதிரி இருக்கு கங்குவா… உலகத்தரம்யா… இயக்குனர் வைத்த வேண்டுகோள் செமயா இருக்கே!

இதனால் அவர் நடிப்பில் உருவாக இருந்த விடாமுயற்சி திரைப்படம் பெரிய அளவில் தள்ளிப்போனது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு மேல் விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டது. இருந்தும் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்த அஜர்பைஜான் கால சூழ்நிலையால் சரியான நேரத்தில் படத்தை முடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். உடனே அப்படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஒரே நாளில் தொடர்ச்சியாக நடந்தது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் அஜித் காலையில் ஒரு படத்தின் ஷூட்டிங்கிலும், மாலையில் இன்னொரு படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் முடிந்து தற்போது டப்பிங் பணிகளும் தொடங்கி நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சுசித்ராவை இயக்குவது நயன்தாராவா? தனுஷின் நடவடிக்கையில தான் இனி எல்லாமே இருக்கு!