2வது நாளில் வசூல் படுத்துடுச்சே!.. குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…

good bad ugly
Good bad ugly: அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகமெங்கும் வெளியானது. பில்லா, மங்காத்தா படத்திற்கு பின் அதுபோல அஜித்துக்கு மாஸான காட்சிகள் அமைந்த திரைப்படம் வெளியாகவில்லை என்றே சொல்லலாம். இடையில் வீரம், விஸ்வாசம், வேதாளம் என ஹிட் படங்களை கொடுத்தாலும் அந்த படங்களில் நிறைய செண்டிமெண்ட் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், படம் முழுக்க ஹீரோயிசம் பண்ணும் காட்சிகள் இல்லை.
இப்போது வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் படம் முழுக்க அப்படிப்பட்ட காட்சிகளே இருக்கிறது. இதுவே அஜித் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. கேங்ஸ்டராக இருக்கும் அஜித் மகனுக்காக அதை ஒத்துக்க்கொண்டு சிறைக்கு செல்கிறார். ஆனால், மகனை காப்பாற்றுவதற்காக மீண்டும் கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜூன் தாஸும் நடித்திருக்கிறார்கள். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு லைப் கொடுத்த அஜித் இந்த படத்தில் அர்ஜூன் தாஸுக்கு கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு எதிராக வில்லத்தனம் செய்கிறார் அர்ஜூன் தாஸ்.

இந்த படம் முதல் காட்சி முடிந்த பின் நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தது. படத்தில் கதை இல்லை. லாஜிக் இல்லை, குடும்பத்தோடு போய் பார்க்க கூடிய செண்டிமெண்ட் காட்சிகள் இல்லை, அஜித் ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், 3 காட்சிகளுக்கு பின் இந்த விமர்சனம் மொத்தமாக மாறிப்போனது.
அஜித் ரசிகர்கள் மட்டுமில்லை. எல்லோருக்கும் பார்க்கலாம். லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால் ரசிக்கலாம்.. முழுக்க முழுக்க தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள். எனவே, படம் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது. நேற்று ஒருநாளில் இப்படம் தமிழகத்தில் 31.9 கோடி வசூல் செய்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், உலகம் முழுவதும் சேர்த்து 50 கோடி வரை வசூல் செய்ததாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், 2ம் நாளான நேற்று இப்படம் தமிழகத்தில் 13.50 கோடியை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது முதல்நாளை ஒப்பிடும்போது 2ம் நாள் வசூல் பாதியாக குறைந்திருக்கிறது. இத்தனைக்கும் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகத்தில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், பலரும் நேற்று கோவிலுக்கு சென்றிருக்க வாய்ப்பிருப்பதால் வசூல் குறைந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. தொடர்ந்து சனி, ஞாயிறு வருவதால் வசூல் அதிகரிக்கும் என்றே பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.