தெறி மாஸ் லுக்கில் அஜித்குமார்!.. வெளியான குட் பேட் அக்லி செகண்ட் லுக் போஸ்டர்!...

துணிவு படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக ஒரு படம் துவங்கப்பட்டது. ஆனால் அப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் தூக்கப்பட மகிழ் திருமேனி உள்ளே வந்தார். அதன்பின்னர் விடாமுயற்சி படம் துவங்கப்பட்டது. இப்படத்தில் திரிஷா, அர்ஜூன் என பலரும் நடிப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால், பல மாதங்கள் ஆகியும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. ஒரு வழியாக கதையை உறுதி செய்து படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜான் நாட்டில் துவங்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு துவங்கி 6 மாதங்கள் ஆகியும் சரியாக நடக்கவில்லை. அஜித் ஒருபக்கம் பைக்கை எடுத்துகொண்டு ஊர் சுற்றப் போனார்.
ஒருபக்கம், நிதி நெருக்கடியில் சிக்கியது லைக்கா நிறுவனம். அஜித் வார்னிங் கொடுத்து கொடுத்து ஒரு வழியாக படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்த படம் 60 சதவீதம் முடிந்த போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் அஜித்.
மார்க் ஆண்டனி எனும் சூப்பர் ஹிட் படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் இது என்பதால் ரசிகர்களிடம் குட் பேட் அக்லி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படமும் ஒரு பக்கா கமர்ஷியல் கேங்ஸ்டர் படமாகவே உருவாகவிருக்கிறது. இந்த படத்தில் 3 வேடங்களில் அஜித் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சில நாட்கள் இப்படத்தில் நடித்த அஜித் இப்போது மீண்டும் விடாமுயற்சி படத்திற்காக அஜர் பைசான் நாட்டுக்கு போயிருக்கிறார். இதுதான் கடைசிகட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதில், ஜெயில் கைதி போல உடையணிந்து செம மாஸாக விண்டேஜ் லுக்கில் போஸ் கொடுத்திருக்கிறார் அஜித். அதோடு, படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் எனவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.