குட் பேட் அக்லி செகண்ட் சிங்கிளில் விஜயை சீண்டும் வரிகள்!.. பால் டப்பா பண்ண வேலைய பாருங்க!..

#image_title
Vijay Ajith: விஜயும் அஜித்தும் திரையுலகில் ஒரே காலகட்டத்தில் வளர்ந்தவர்கள். இரண்டு பேருமே காதல் கதைகளில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாகி பின்னர் மாஸ் ஹீரோவாக மாறியவர்கள். ரஜினி - கமலுக்கு பின்னர் விஜய் - அஜித் போட்டி என்பது உருவானது. ரஜினி - கமல் ரசிகர்கள் எப்படி சண்டை போட்டுக்கொண்டார்களே அதையேதான் விஜய் - அஜித் ரசிகர்களும் செய்தார்கள்.
அதிலும் டிவிட்டரில் அசிங்கமான ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அதை டிரெண்டிங் செய்து மாறி மாறி திட்டிக் கொண்டனர். ஒருவரை புகழ்வதற்காக மற்றொருவரை அசிங்கமாக பேச வேண்டாம் என அஜித் கோரிக்கை வைத்தும் அவரின் ரசிகர்கள் கேட்கவில்லை. ‘விஜய் வாழ்க.. அஜித் வாழ்க என சொல்லிகொண்டிருக்கும் நீங்கள் எப்ப நீங்க வாழ போறீங்க?’ என அஜித் நேரிடையாகவே கேட்டார்.

இப்போதாவது விஜய், அஜித் இருவருக்குமே வயது பக்குவத்தை கொடுத்துவிட்டது. ஆனால், 20 வருடங்களுக்கு முன்பு இருவருமே இப்படி இல்லை. தாங்கள் நடிக்கும் படங்களில் இடம் பெற்ற வசனங்கள் மற்றும் பாடல் வரிகளில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டார்கள். அட்டகாசம் படத்தில் ‘இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?’ என பாடலை பாடினார் அஜித். இந்த பாடலில் வரும் எல்லா வரிகளும் விஜயை மனதில் வைத்தே எழுதப்பட்டிருந்தது. திருமலை படத்தில் ‘யார்ரா உங்க தல?’ என விஜய் கோபமாக கேட்பார்.
இப்படி சினிமாவில் மறைமுகமாக இருவரும் சண்டை போட்டுக்கொண்டார்கள். ஆனால், காலம் அவர்களுக்கு பக்குவத்தை கொடுக்க இப்போது அதெல்லாம் இல்லை. இந்நிலையில்தான் குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் சிங்கிள் God Bless You இப்போது வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை மக்காமிஷி பாடல் புகழ் பால்டப்பா எழுதி சில வரிகளை பாடியிருக்கிறார்.

இந்த பாடலில் துப்பாக்கிச் சத்தம் எனக்கு தாலாட்டு பாட்டு, கத்திய உரசும் சத்தம் மெலோடி பீட்டு, என விஜயின் துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை குறிக்கும் வரிகள் வருகிறது. ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிளில் ‘துப்பாக்கி பீரங்கி மொத்தமா வந்தாலும் ஒத்தாள சம்பவம்டா’ என்ற வரிகள் இடம் பெற்றிருந்த நிலையில் செகண்ட் சிங்கிளில் இப்படி வரிகள் வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு இது கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.