மாமே சவுண்ட் ஏத்து!. குட் பேட் அக்லி செகண்ட் சிங்கிள் அப்டேட்!.. செம வீடியோ!…

by சிவா |   ( Updated:2025-03-29 08:08:25  )
ajith
X

#image_title

Good Bad Ugly: விடாமுயற்சி சரியான வரவேற்பை பெறாத நிலையில் அஜித் ரசிகர்கள் அடுத்து வரும் குட் பேட் அக்லி படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த படமும் அவர்களை முழுக்க முழுக்க திருப்திப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது டீசர் வீடியோவை பார்க்கும்போதே தெரிகிறது.

இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் வீடியோவில் இடம் பெற்றிருந்த காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸை கொடுத்தது. ஏனெனில், தீனா, பில்லா உள்ளிட்ட பல படங்களின் கெட்டப்பில் அஜித் வருகிறார்.

அதோடு பக்கா கேங்ஸ்டர் ஆக்சன் படம் என்பதால் இப்படம் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில், மங்காத்தா படத்திற்கு பின் அஜித் ரசிகர்களுக்கு ஒரு தரமான படம் அமையவில்லை. குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்தாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த் படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் 2வது சிங்கிள் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பால் டப்பா எழுத அனிருத் பாடியிருக்கிறார். பால் டப்பா என்பவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பிரதர் படத்தில் இடம் பெற்ற ‘மக்காமிஷி’ எழுதியவர்.

அவர் எழுதி அனிருத் பாடியிருப்பதால் ரசிகர்களிடம் இந்த பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில் புரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

Next Story