குட் பேட் அக்லி டிரைலர் இன்னைக்குத்தான்!.. ஆனால், டைம் தெரியாது!.. என்ன கொடுமை கோயிந்தா!..

by Saranya M |   ( Updated:2025-04-04 02:36:53  )
குட் பேட் அக்லி டிரைலர் இன்னைக்குத்தான்!.. ஆனால், டைம் தெரியாது!.. என்ன கொடுமை கோயிந்தா!..
X

#image_title

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக உள்ள குட் பேட் அக்லி படத்தின் ட்ரைலர் இன்று வெளியாக உள்ளதாக அந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், ட்ரைலர் வெளியாகும் நேரத்தை அவர் மறைத்திருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் பல நாட்கள் கழித்து வெளியாகியும் படு தோல்வியை சந்தித்தது. அதை தொடர்ந்து அவர் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கதில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் திரிஷா, பிரபு, யோகி பாபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், மற்றும் சுனில் வர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குட் பேட் அக்லி படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ஓஜி சம்பவம் மற்றும் அனிருத் பாடியுள்ள காட் ப்ளஸ் யூ மாமே பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. அந்த பாடலில் அஜித் குமார் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

மேலும், குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை பற்றி பேசிய போது இந்த உலகம் குட்டாக இருக்கும் போது குட்டாகவும், பேடாக இருக்கும் போது பேடாகவும், அக்லியாக இருக்கும் போது அக்லியாக நாம் இருக்க வேண்டியிருக்கிறது எனவும் இதையே படத்தின் மையமாக வைத்து உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இன்று குட் பேட் அக்லி படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று ட்ரைலர் ரீலிசைப்பற்றி பதிவிட்ட அவர் அதன் நேரத்தை கூறாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பை தொடங்கிய குட் பேட் அக்லி படம் ஒரு வழியாக ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரஜினிகாந்தின் கூலி படத்தின் அப்டேட்டை பார்த்துவிட்டு அதன் பின்னர், குட் பேட் அக்லி ட்ரைலரை வெளியிடலாம் என்கிற கணக்கில் அமைதியாக இருக்கிறார்களா என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

Next Story