Good Bad Ugly: லியோக்கு மட்டும் போராட்டம்… குட் பேட் அக்லிக்கு மட்டும் கொண்டாட்டமா? என்னங்கப்பா நியாயம்!

by Akhilan |
Good Bad Ugly: லியோக்கு மட்டும் போராட்டம்… குட் பேட் அக்லிக்கு மட்டும் கொண்டாட்டமா? என்னங்கப்பா நியாயம்!
X

Good Bad Ugly: சினிமாவின் முன்னணி நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் படங்கள் எப்போதுமே எல்லா தரப்பினாலும் தீவிரமாக கண்காணிக்கப்படும் அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் குட் பேக் எதிராக விஜய் ரசிகர்கள் கண்டன கொடியை ஏற்றி இருக்கின்றனர்.

தலைமுறை தலைமுறைகளாக இரண்டு பெரிய நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வது வழக்கம்தான். இருந்தும் அது அதிகமானது விஜய் அஜித் ரசிகர்களுக்கு உள்ளாக தான். எப்போதுமே இருதரப்பும் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் சண்டை செய்வது வழக்கம்.

ஆனால் கடந்த சில வருடங்களாகவே இது பெரிய அளவில் குறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் அஜித் தன்னுடைய படங்களில் அதிக கவனம் செலுத்தாமல் ரேசிங் களத்தில் இறங்கினார். இரண்டு வருடங்கள் கழித்து இந்த வருடம் தான் தொடர்ச்சியாக அவருடைய படங்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் நேற்று வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் கோலாகலமாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் இப்படம் அஜித்தின் மொத்த படங்களின் ரெஃபரன்ஸை சேர்த்து இருப்பதால் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மற்றுமொரு தரப்பு இந்த படம் பெரிய அளவில் இருக்கவில்லை. ரொம்ப சுமாராக இருப்பதாக பேசிக் கொள்கின்றனர். இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் ஒரு பிரச்சனையை கையில் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

அந்த வகையில், இப்படத்தில் திரிஷா பேசும் கெட்ட வார்த்தை காட்சி ஒன்று படத்தை இடம்பெற்றிருக்கிறது. அப்பொழுது அஜித்தும் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கும் அந்த காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது. இதே பிரச்சினையை தான் விஜயின் லியோ திரைப்படம் சந்தித்தது.

லியோ படத்தின் டிரைலர் வெளியான போது விஜய் அதே கெட்ட வார்த்தையை பேச அது பல இடங்களில் வைரலாக பரவியது. முன்னணியில் இருக்கும் நடிகர் விஜய் இதை எப்படி பேச ஒப்புக்கொண்டார். இது இளைஞர்களை தப்பான முறையில் வழிநடத்தும் தானே என பலரும் கேள்விகளை முன் வைத்தனர்.

இந்நிலையில் அஜித்தின் படத்திலும் இதே போன்ற ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இது குறித்து எந்தவிதமான எதிர் கருத்தும் வெளியாகவில்லை. தற்போது தான் இது வைரலாகி வரும் நிலையில் அஜித்தும் இதை பிரச்சினையை சந்திப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story