கதை இல்லன்னா என்ன!.. அஜித் ஒருத்தர் போதுமே!.. செம படம்!.. எல்லோரும் சொல்வது என்ன?!…

Good bad ugly: அஜித் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த குட் பேட் அக்லி படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், இந்த படம் எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் ரசிகர்களுக்கு சொல்லிவிட்டது.
எனவே, படத்தை பார்க்க வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இப்படம் இன்று காலை இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. ஆன்லைன் புக்கிங்கிலேயே சில கோடிகளுக்கு படத்தின் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டது. எனவே, முதல் நாளே இப்படம் 100 கோடி வரை வசூல் செய்யும் என சிலர் சொன்னார்கள்.
இந்த படம் இன்று காலை வெளியாகி அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் லாஜிக் இல்லை, கதை இல்லை, எமோஷனல் கனெக்ட் இல்லை என விமர்சகர்கள் சொன்னாலும் ரசிகர்களுக்கு படம் பிடித்திருக்கிறது. ஏனெனில், அஜித்தை எப்படி காட்டினால் ரசிகர்களுக்கு பிடிக்குமோ அப்படி காட்டியிருக்கிறார் ஆதிக்.
படத்தின் முதல் பாதி போல இரண்டாம் பாதி இல்லை.. ஆதிக் ரவிச்சந்ந்திரன் கதையை சரியாக எழுதவில்லை. படம் முழுக்க ஒரு பில்டப்பாக இருக்கிறது. பிஜிஎம் சவுண்ட் காதை கிழிக்கிறது.. செண்டிமெண்ட் காட்சிகளே இல்லை. அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆனால், பொதுவான ரசிகர்களுக்கு படம் பிடிக்குமா என்பது சந்தேகமே என சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள். மேலும், ஃபேமிலி ஆடியன்ஸுக்கு படம் பிடிக்குமா என தெரியவில்லை என்றும் சொன்னார்கள்.

ஆனால், லாஜிக்கெல்லாம் பார்க்கவே தேவையில்லை. செம எனர்ஜியோடு அஜித் நடித்திருக்கிறார். படம் முழுக்க மாஸான காட்சிகள் நம்மை சந்தோஷப்படுத்துகிறது. எதைப்பற்றியும் யோசிக்காமல் படம் பார்த்து என்ஜாய் பண்ணலாம் என படம் பார்த்தவர்கள் சொல்லி வருகிறார்கள். படத்தின் குறைகளை விமர்சகர்கள் சொல்லட்டும். நாம் அதுபற்றி யோசிக்க வேண்டாம். அஜித் ஒருவருக்காகவே படம் பார்க்கலாம் என பலரும் சொல்லி வருகிறார்கள்.
பலரும் சொல்வதை பார்க்கும்போது எதைப்பற்றியும் யோசிக்காமால் குட் பேட் அக்லி பார்த்து ரசிக்கலாம் என்கிற எண்ணமே பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஒருபக்கம் தொடர் விடுமுறைகள் வருவதால் குட் பேட் அக்லி நல்ல வசூலை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.