இர்பான் வீட்டில் குட் நியூஸ்.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!
யூடியூப் பிரபலம் இர்பானுக்கு அறிமுகம் தேவை இல்லை. உள்ளூர் முதல் வெளிநாட்டு உணவுகள் வரை சாப்பிட்டு விமர்சனம் செய்பவர். தமிழில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
இவரது யூடியூப் சேனல் முழுக்க முழுக்க உணவுக்கே பிரத்தியேகமானது. தனது கடின உழைப்பினால் தினமும் ஒரு வீடியோ பதிவிட்டு வருகிறார். இவரது வீடியோக்கள் மில்லியன் கணக்கில் பார்வைகளை அள்ளுவது வழக்கம்.
இர்பான் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மனைவி மற்றும் குடும்பத்துடன் இணைந்து சமையல் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி ஆல்யா தற்பொழுது கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் ரசிகர்கள் ஆல்யா கர்ப்பமாக இருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்தது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரம்ஜான் அன்று அவர் சூசகமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் "நாம் மற்றும் நாங்கள்" என்று என்று கூறி மனைவியுடன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார் . இதனை பார்த்து ரசிகர்கள் "ஒரு வேலை இருக்குமோ?" என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
தனது வாரிசு பற்றி ரசிகர்கள் எழுப்பும் கேள்விக்கு அவர் சீக்கிரமே பதில் அளிப்பார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இர்பான் மற்றும் அவரது மனைவி சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், 7-வது மாதத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.