நல்ல செய்தி!.. நீண்ட நாளுக்கு அப்புறம் தனுஷ் - ஐஸ்வர்யா சேர்ந்து செல்லும் இடம் எது தெரியுமா?..

by Rohini |
dhanush_main_cine
X

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் வசூல் வேட்டை செய்தாலும் சமீபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் போகவில்லை.

dhanush1_cine

மேலும் தனது அடுத்தகட்ட பணிகளில் தன் கவனத்தை செலுத்த தயாராகி விட்டார். இந்த நிலையில் வெளியில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் இவருடைய சொந்த பிரச்சினையை தாம் பிரச்சினையாக ரசிகர்கள் மாற்றிவிட்டனர். அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் தனுஷும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மிகவும் விருப்பப்படுகிறார்கள்.

இதையும் படிங்க : நல்லவனா மட்டும் தான் நடிப்பேனு சொல்லலையே… அஜித்தால் அதிர்ந்த இயக்குநர்…

dhanush2_cine

அதுமட்டுமில்லை. பிரபலங்கள் மத்தியிலும் அதே கருத்து தான் நிலவுகிறது. இந்த நேர்மறையான எண்ணம் தான் என்னவோ அவர்கள் மனதையும் மாற்றியிருக்கிறது என்று கூறலாம். மீண்டும் சேரும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள் இருவரும். ஆனால் தன் பிள்ளைகளுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்திருந்தார்கள்.இந்த செய்தியும் இணையத்தில் வைரலானது.

dhanush3_cine

இந்த நிலையில் ஏற்கெனவே தனுஷ் போயஸ் கார்டனில் ஒரு பிரம்மாண்டமான வீடு கட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் அந்த வீட்டின் கிரஹப்பிரவேஷம் வரும் ஜனவரி மாதத்தில் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஒரு வேளை அந்த புதுவீட்டிற்கு காலடி எடுத்து வைக்கும் போது தனது காதல் மனைவியோடு செல்வார் என்று கோடம்பாக்கத்தில் சில தகவல்கள் உலாவருகின்றது.

Next Story