More
Categories: Cinema News latest news

அந்த ஒரு நாள்… அந்த இடம்.. நினைத்தாலே கை நடுங்கும், வியர்த்துவிடும்.. மறக்கமுடியாத சம்பவத்தை பகிர்ந்த குட் நைட் மணிகண்டன்..

நடிகர் மணிகண்டன் 8 தோட்டாக்கள், காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா, காலா, சில்லு கருப்பட்டி, ஏலே, ஜெய் பீம், குட் நைட் உள்ளிட்ட பல படங்களில் நடி்ததுள்ளார். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும், ஜெய் பீம் படத்தின் மூலம் தான் இவர் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுது வருகிறார். இந்நிலையில் நடிகர் மணிகண்டன் சமீபத்திய பேட்டி ஒன்றில், தன் வாழ்க்கையில் அந்த நாளை மட்டும் மறக்கவே மாட்டேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க- மொத்த படத்தையும் மூணு தடவை டப்பிங் பண்ணுனேன்!.. – சூது கவ்வும் நடிகரை படுத்தி எடுத்த மணிகண்டன்…

அந்த பேட்டியில் உங்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாள், அல்லது ஏதேனும் ஒரு சம்பவம் இருக்கிறதா என்று கேள்வி கேட்டதற்கு பதிலளித்த மணிகண்டன், அந்த நபர் யார் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அந்த சம்பவத்தை என்னால் எப்போதுமே மறக்க முடியாது. அப்போது நான் கல்லூரியில் படித்துகொண்டிருந்தேன். 19 வயது தான் இருக்கும்.

டைபாய்டு காய்ச்சல் வந்து குணமான இரண்டாவது நாள், ஒரு படத்திற்கு ஆடிஷனுக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த உதவி இயக்குநர்கள், டயலாக் பேப்பரை கொடுத்து படித்து பார்த்துவிட்டு வந்து நடிக்க சொன்னார்கள். நானும் நடிக்க சென்றேன். அப்போது, அங்கு வந்த இயக்குநர், உதவி இயக்குநர்களை திட்டத் தொடங்கிவிட்டார்.

இந்த மூஞ்சியையா அந்த கேரக்டருக்கு ஆடிஷன் செய்கிறீர்கள் என்று கூறி மிக மோசமாக திட்டினார். என்னையும் கூப்பிட்டு, உனக்கெல்லாம் நடிக்க வேண்டும் என்று ஆசையா? உங்கள் வீட்டில் கூறினாயா? அவர்களும் கூட உன்னை தடுக்கவில்லையா? என்று மிகவும் அசிங்கபடுத்தி அனுப்பிவிட்டார். முதல்முறை என்பதால், என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்போது வரை அந்த இடத்திற்கு சென்றால், வியர்த்து கையெல்லாம் நடுங்கிவிடும் என்று உருக்கமாக பேசியுள்ளார் மணிகண்டன்.

இதையும் படிங்க- 50 ரூபாய் கொடுத்து ஸ்டூடியோவை விட்டே விரட்டிட்டாங்க!.. வாழ்க்கையை வெறுத்த ஜெய்பீம் மணிகண்டன்!..

Published by
prabhanjani

Recent Posts