#image_title
டார்க் ஹியூமர், டிராமடிக் ஐரனி (dramatic irony) ஸ்க்ரீன்பிளே மெத்தடுகளைப் பயன்படுத்தி 34 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட படம்தான் கோபுர வாசலிலே. இது கார்த்திக் நடித்த சூப்பர்ஹிட் படம். இந்த டிராமடிக் ஐரனி மெத்தடுன்னா படத்துல நடக்குற ஒரு விஷயம் நமக்கும் தெரியும். ஆனா சம்பந்தப்பட்ட கேரக்டருக்குத் தெரியாது. இந்தப் படத்துல கார்த்திக் ஏமாற்றப்பட்ட ஒரு விஷயம் நமக்குத் தெரியும். ஆனா கார்த்திக்குக்குத் தெரியாது. மலையாள மொழியில் வந்த ஒரு சிறுகதைதான் இந்தப் படத்துக்கு அடிப்படையான விஷயம்.
இளையராஜாவின் இசை அருமை. அவர் கொடுத்த பாடல்கள் எல்லாமே தேனடை. பிஜிஎம் எல்லாமே உணர்வுப்பூர்வமாக உயிரோட்டமாக இருக்கும். ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ என்ற ஒரு பாடல் போதும். இந்தப் படத்தின் பாடல்களை ரசிக்க. அதே போல தாலாட்டும் பூங்காற்று பாடல் நம்மைக் குழந்தையாக மாற்றி விடும்.
‘தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது’ என்ற இந்தப் பாடல் படத்தில் ஒரு ஐகானிக் சாங் என்றே சொல்லலாம். கே.ஜே.யேசுதாஸூம், எஸ்.ஜானகியும் பாடிய ‘நாதம் எழுந்ததடி’ பாடல் நம்மை மெய்மறந்து ரசிக்க வைக்கும். இந்தப் படத்தில் ‘கேளடி என் பாவையே’ பாடலில் மலையாள நடிகர் மோகன்லால் வந்து போவார். ‘பிரியசகி’ என்ற பாடல் காதலின் வலியை சொல்லும் அற்புத பாடல்.
gopura vasalile
கார்த்திக் தன்னோட காதல் தோல்வியை நினைத்து அழும்போதும், கிளைமாக்ஸ் சீன்லயும் இளையராஜாவின் பிஜிஎம்மும் நடித்து இருக்கும். படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வித்தியாசமான கோணங்களில் வெகுநேர்த்தியாக படம்பிடித்து இருந்தார். அழகான கார்த்திக்கோட சிறந்த நடிப்பை இந்தப் படத்தில் காணலாம்.
வழக்கமான துள்ளல், உக்கிரம் என வெவ்வேறு பரிமாணங்களில் நடித்து ஜொலித்து இருந்தார் கார்த்திக். அதே போல பானுப்பிரியா தனது யதார்த்தமான நடிப்புல ரசிகர்களைக் கவர்கிறார். கார்த்திக்கின் நண்பராக நாசர், சார்லி, ஜூனியர் பாலையா ஆகியோர் நடிச்சிருப்பாங்க. இதுல நாசர்தான் லீடர். இயல்பான ஆனா மெலிதான வில்லத்தனம் கலந்த கலவையாக நாசர் அருமையாக நடித்து இருப்பார்.
நாகேஷ், விகே.ராமசாமி இருவரும் தனது பங்கிற்கு அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கார்த்திக்கின் காதலியாக வருபவர் சுசித்ரா. விஎம்சி.ஹனிபாவும் நல்ல நடிப்பு. பிரியதர்ஷன் படத்தின் இயக்குனர். இந்தப் படம் ஏ சென்டர்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சியான் விக்ரமின்…
Coolie: திரைப்பட…
ரியோ ராஜ்…
Sivakarthikeyan: சென்னை…
நேஷ்னல் கிரஷ்…