Gossip: இரண்டெழுத்து பிரபலத்தை வச்சு ஸ்கோர் செய்ய பார்த்த நம்பர் நடிகை… இந்த விளம்பரம் தேவையா?

by Akhilan |   ( Updated:2025-05-06 07:34:13  )
Gossip: இரண்டெழுத்து பிரபலத்தை வச்சு ஸ்கோர் செய்ய பார்த்த நம்பர் நடிகை… இந்த விளம்பரம் தேவையா?
X

#image_title

Gossip: தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த பிரபலம் சமீப நாட்களாகவே சர்ச்சையில் சிக்கி கொண்டு இருக்கிறார். இதனால் தன்னுடைய பெயரை தூக்கி நிறுத்த அம்மணி தற்போது பல வழிகளில் முயற்சி செய்து வருகிறாராம்.

பொதுவாக நடிகைகள் பெரிய பிரபலம் கிடைப்பது அரிதுதான். அதில் ஒரு சிலருக்கு தான் மிகப்பெரிய அந்தஸ்த்து கிடைக்கும். அப்படி ஒரு நடிகை தான் தமிழ் சினிமாவின் நம்பர் நடிகை. இவர் ஹிட்டாக பல படங்களில் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் சாமி இயக்குனருடன் காதல் வலையில் சிக்கினார். ஏற்கனவே இரண்டு நடிகர்களுடன் நடந்த பிரேக்கப்பால் இந்த முறை கொஞ்சம் அடக்கி தான் வாசித்தார். வாயை பல இடங்களில் திறக்காமல் அமைதி காத்தார். நல்லா காதலித்து சம்பாரித்து கல்யாணம் செய்தனர்.

கல்யாணம் தொடங்கிய வியாபாரம் தான் அவருடைய சினிமா வாழ்க்கைக்கு வேட்டு வைத்தது. அதை தொடர்ந்து அவர் சந்தித்தது என்னவோ சர்ச்சைகள் மட்டுமே. அந்த வகையில் அம்மணி தற்போது பிளாப் நாயகியாகவே இருக்கிறார்.

சரி பிசினஸ் பக்கம் போகலாம் என நினைத்து அவர் செய்தது சிலதும் தவறாக முடிய என்னடா வம்பா போச்சு என்ற ரீதியில் கொஞ்ச நாள் ஆள் அடையாளம் இல்லாமல் இருக்கிறார். அது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் சுள்ளான் நடிகரை சீண்டி வேறு வம்பை விலை கொடுத்து வாங்கி வைத்து இருக்கிறார்.

பெரும்பாடுப்பட்டு தற்போது அந்த கடவுள் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் பூஜை விழாவிலேயே அம்மணி எக்கசக்க திமிருத்தனங்கள் வேறு செய்து பிரச்னை ஆக்கினார். சக நடிகையிடம் போட்டோக்காக சண்டை போட்டது, முதல் மரியாதை எதிர்பார்த்தது என பட்டியல் நீண்டது.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இரண்டெழுத்து தொகுப்பாளினியிடம் அவர் தன்னை பற்றி பரப்பிய விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கேட்டு இருக்கிறார். இருவருக்கும் நடந்த ஒரு பேட்டி விஷயம் என்பதால் அப்பட்டமாக தொகுப்பாளினி சொன்னது நம்பர் நடிகையுடன் ஒத்து போனதால் ரசிகர்கள் விளாசி தள்ளினர்.

இந்த பட விழாவில் கேட்டுக்கொண்டதால் சமீபத்தில் ஒரு பேட்டியில் சம்மந்தமில்லாமல் அவங்களாம் ரொம்ப நல்லவங்க என்ற ரீதியில் இரண்டெழுத்து பிரபலம் சொல்ல என்ன ஐஸா என அவரையும் இப்போது கலாய்த்து வருகின்றனர். அப்போ உங்களிடம் நடந்துகிட்ட நடிகை யார் என சொல்லி முடிச்சி விடலாமே அம்மணி என்பதுதான் கேள்வி.

Next Story