Gossip: தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வந்த நம்பர் நடிகை தற்போது ஏதாவது ஒரு படம் வெற்றி பெற்று விடுமா என கவலையில் இருக்கிறார். இதை பயன்படுத்திக் கொண்ட பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அவர் செய்யவே செய்யாத ஒரு விஷயத்தை செய்ய வைத்திருக்கிறார்.
பொதுவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர்தான் படத்தின் வேலைகளை முடித்துக் கொண்டு தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி விலகிவிடுவார். படம் அதுவே ஒவ்வொன்றாக வெளியாகி வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலோ அது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மட்டுமே முன்னிலையில் இருந்து பேசி வருவார்கள்.
ஆனால் அவருடைய ரூட்டை பெரும்பாலும் மற்ற நடிகர்கள் பின்பற்றுவதில்லை. தங்களுடைய படங்களின் வேலைகளை முடித்துக் கொண்டு அதற்கான புரமோஷன் பணிகளிடம் ஈடுபடுவது வழக்கம்தான். ஆனால் இதில் சற்று விலக்கமாக நம்பர் நடிகை இந்த ரூட்டை பிடித்தார்.
திடீரென கொடிகட்டி பறந்தவர் தன்னுடைய படங்களை மட்டுமே முடித்துக் கொள்வார். வெளியில் தலை காட்டாமல் இருந்தார். ஆனால் அவருடைய காலம் முடிந்துவிட்ட நிலையில், இப்பொழுது எல்லாமே தலைகீழாக மாறியிருக்கிறது. கல்யாணத்திற்கு பின் அம்மணி பல இடங்களில் தலை காட்டி வருகிறார்.
தன்னுடைய வியாபாரத்தை பெரிய வகையில் பெருக்குவதால் அதற்கான புரமோஷன்களில் இவரே இறங்கி வேலை செய்து வருகிறார். அப்படி ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் இவர் கொடுத்த அட்டூழியம் அதிகமாக பலரும் அதை பொதுவெளியில் எடுத்து வந்து கலாய்த்து தள்ளி இருந்தனர்.
இந்நிலையில் நம்பர் நடிகை தன்னுடைய படங்களுக்கு மட்டுமே பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுவார். ஆனால் மற்ற தயாரிப்பாளர் எடுக்கும் படங்களில் அவரை பார்க்க முடியாது. தன்னை அவர்கள் வற்புறுத்தக் கூடாது என ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே அதையும் இணைத்து கையெழுத்து போட்டு வாங்கிக்கொள்வார்.
ஆனால் தற்போது நம்பர் நடிகை அம்மன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையை இந்த படம் மட்டுமே. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் மிகப்பெரிய அளவில் படத்திற்கான பூஜையை நடத்தியதால் இப்படத்தில் இருக்க வேண்டுமென்றால் பூஜை நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என கறாராக சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அம்மணியை பூஜை நிகழ்ச்சியில் காண முடிந்தது. அங்கும் அவர் சக நடிகை உடன் சீண்டிக்கொண்ட விஷயம் எல்லாம் வெளியாகி பலருக்கு முகம் சுளிப்பை ஏற்படுத்தியது. இருந்தும் இந்த படத்தின் ப்ரோமோஷனில் அம்மணி கண்டிப்பாக தலைகாட்டியே ஆக வேண்டியதில்லை தற்போது உருவாகி இருக்கிறது.