Gossip: நடிகர் பெயர் கொண்ட சேனலில் இத்தனை மாற்றமா? திடீர் பரபரப்புக்கு காரணம் இதுவா?

by Akhilan |
Gossip: நடிகர் பெயர் கொண்ட சேனலில் இத்தனை மாற்றமா? திடீர் பரபரப்புக்கு காரணம் இதுவா?
X

Gossip: தொலைக்காட்சிகளில் தனக்கென தனி அடையாளம் வைத்திருப்பது ஹீரோ பெயர் கொண்ட சேனல். ஒரே ஒரு தவறால் தற்போது மொத்த சாம்ராஜ்யத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இருந்து வருவது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சேனல் உலகில் வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொண்டு வந்தது ராஜா மகுடம் சூட்டிக்கொண்டது ஹீரோ பெயர் கொண்ட சேனல். ஆனால் அவர்கள் ஆரம்பத்தில் வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொடங்கினாலும் அது ஒன்று ஹிட் ஆகிவிட்டால் உடனே சீசன் சீசனாக தொடங்கி விடுவார்கள்.

இதனால் ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு அதன் மேல் வெறுப்பு தட்ட தொடங்கியது. இவர்கள் கைவசம் இருந்த பல நிகழ்ச்சிகள் தற்போது ரசிகர்களுக்கு போர் அடிக்க துவங்கி விட்டது. இதனால் சேனலின் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் அடி வாங்கியது.

தற்போது இதன் தலைமை இன்னொரு டீமுக்கு கைமாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இனிமேல் அக்கட தேசத்திலிருந்து அந்த டீம்தான் இந்த டிவியின் பல விஷயங்களை தலைமையேற்று நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதனால் இந்த சேனலின் அரைத்த மாவை அரைக்கும் பல நிகழ்ச்சிகளை மூட்டை கட்ட துவங்கியிருக்கின்றனர். அதற்காக பல தொகுப்பாளர்கள் டிவியை விட்டு துரத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்ட பிரியமான தொகுப்பாளனி இனிமேல் இந்த டிவியில் வர மாட்டார்.

அது மட்டுமல்லாமல் விவாத நிகழ்ச்சிக்கு பெயர் போன அந்தக் கோட் தொகுப்பாளருக்கும் ஸ்கெட்ச் போடப்பட்டு இருக்கிறதாம். இருந்தும் அவர் அந்த சேனலில் நீடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அவர் வெளியேறினால் தூக்கி செல்ல பல தொலைக்காட்சிகள் இப்போதே போட்டி போட துவங்கி இருக்கிறதாம்.

இதன் காரணமாக தற்போது தொலைக்காட்சி தொடர் இயக்குனர்கள் சற்று சுதாரித்து இருக்கின்றனர். டிஆர்பி மோசமான நிலையில் இருக்கும் டிவி தொடர் எல்லாம் தற்போது தங்களுடைய கதைக்களத்தை மாற்றியமைத்து வருகின்றனர்.

அந்த வகையில் தான் இந்த வாரம் வெளியான எல்லா புரோமோக்களும் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டாம். கொஞ்சம் அசந்தாலும் சட்டென முடித்து விட்டு போய்விடுவார்களாம்.

Next Story